பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே - போஸ்டரால் பரபரப்பு!

தமிழகம்
Updated Jun 12, 2019 | 10:50 IST | Times Now

அதிமுக கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே என்று எழுதப்பட்டு இருக்கிறது. இந்தப் போஸ்டரால் வெளியே நின்று கொண்டிருந்த தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ADMK secretaries meet today poster creates controversy
ADMK secretaries meet today poster creates controversy  |  Photo Credit: Twitter

தற்போது அதிமுக அலுவலகத்தில் அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் தற்போது ராயப்பேட்டையில் நடைபெற்று வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளர் பதவிக்கு யாரையும் தேர்ந்தெடுக்காமல் காலியாகவே வைத்திருக்கிறது அதிமுக கட்சி. அதற்கு அடுத்தாற்போல தலைமை ஒருங்கிணைப்பளாராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இருக்கின்றனர். கட்சியின் அனைத்து முடிவுகளும் இவர்கள் இருவருடனும் கலந்து பேசி எடுக்கப்பட்டு வருகிறது. 

 கூட்டுத்தலைமையால் கட்சியில் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுவதால் ஒற்றைத் தலைமை தேவை என்று எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியிருந்தார். இதற்கு குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரனும் ஆதரவு தெரிவிக்கவே அதிமுகவில் யார் அந்த ஒற்றைத் தலைமை என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் தான் இன்று அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய கலைச்செல்வன், ரத்தின சபாபதி, பிரபு ஆகிய மூன்று எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

poster-creates-stir-before-aiadmk-functionary-meeting

இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் படுதோல்வி குறித்தும்,  சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. மேலும், கட்சியின் உட்கட்சி விவகாரங்கள், குடும்ப அரசியல் பற்றியும் இதில் விவாதிக்கப்பட உள்ள நிலையில் அதிமுக அலுவலகம் வெளியே முதலமைச்சரை அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் இங்கு பெரும் பரபரப்பு தொற்றியுள்ளது. இந்த போஸ்டரில் அதிமுக கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே என்று எழுதப்பட்டு இருக்கிறது. இந்தப் போஸ்டரால் வெளியே நின்று கொண்டிருந்த தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

NEXT STORY