அதிமுக கூட்டத்தில் 4 எம்.எல்.ஏக்கள்..2 அமைச்சர்கள் ஆப்சென்ட்!

தமிழகம்
Updated Jun 12, 2019 | 15:11 IST | Times Now

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களாக அதிமுக தரப்பில் கூறப்படும் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய மூவருக்கும் அழைப்பே அனுப்பப்படவில்லையாம். 

tamil nadu, தமிழ்நாடு
அதிமுக ஆலோசனைக் கூட்டம்  |  Photo Credit: Twitter

சென்னை: சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 4 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை.

உட்கட்சி விவகாரம் குறித்து ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடுமையாக விவாதிக்கப்பட்டது. காலை 10.30 மணிக்கு துவங்கிய இந்த கூட்டம் மதியம் 12 மணிவரை நடைபெற்றது.

இந்நிலையில், பல்வேறு முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்களை வெளியிடும் வகையில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் 2 அமைச்சர்கள் மற்றும் 4 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களாக அதிமுக தரப்பில் கூறப்படும் பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய மூவருக்கும் அழைப்பே அனுப்பப்படவில்லையாம். 

மேலும், அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்று வலியுறுத்திய குன்னம் எம்.எல்.ஏவான ராமச்சந்திரனும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் உடல்நலக்குறைவு காரணமாக கேரளாவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக அமைச்சர்களான ஓ.எஸ்.மணியன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோரும் பங்கேற்கவில்லை. சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருப்பதால் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படாத எம்.எல்.ஏ பிரபு, அதிமுகவுக்கு நல்ல தலைமை இல்லை எனத் தொண்டர்கள் நினைக்கின்றனர். அதிமுகவின் தற்போதைய மிக முக்கிய தேவை ஆளுமை மிக்க தலைமைதான் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY