பிக்பாஸ் தேவையற்றது என்றால் அதிமுக ஆட்சியும் அப்படித்தான் - கமல்ஹாசன் பதிலடி

தமிழகம்
Updated Oct 04, 2019 | 11:28 IST | Times Now

மோடி நாகாலாந்துக்கு சென்றால் அவர்களுடைய தொப்பியை வைத்து சிறிது நேரம் நடனம் ஆடுவது போல நம் பெருமையை சிறிது காலம் வைத்துக்கொள்வார் என்று கமல்ஹாசன் கருத்து.

Kamal Haasan, D Jayakumar, கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார்
கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் | Photo Credit: Twitter/ANI 

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி சமூகத்திற்கு தேவையற்றது என்றால் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியும் அப்படித்தான் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீர்கேடு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு கமல்ஹாசன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தன்னைப் பற்றி அதிமுக அமைச்சர் ஜெய்க்குமார் கூறிய கருத்துக்களுக்கு கமல்ஹாசன் அவர்கள் பதில் அளித்துள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி சமீபகாலமாக தமிழைப் புகழ்ந்து பேசுவது குறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன், மோடி நாகாலாந்துக்கு சென்றால் அவர்களுடைய தொப்பியை வைத்து சிறிது நேரம் நடனம் ஆடுவது போல நம் பெருமையை சிறிது காலம் வைத்துக்கொள்வார் என்று கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டாம் என நடிகர் சிரஞ்சீவி கொடுத்த அறிவுறை குறித்து பதிலளித்த கமல்ஹாசன், ”சென்றவரை கேட்டால் வந்துவிடு என்பார், வந்தவரை கேட்டால் சென்றுவிடு என்பார்” எனும் கவிஞர் கண்ணதாசன் வரிகளை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் ஆயத்தமாகி வருவதாக தெரிவித்தார்.

முன்னதாக, பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீர்கேடு என்றும், ’வசூல் ராஜா’ திரைப்படத்தில் நீட் தேர்வு ஆள்மாறாட்டத்திற்கு வித்திட்டதே நடிகர் கமல்ஹாசன் தான் என்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். “புதிதாக கட்சி தொடங்கிய கமல்ஹாசன் மக்களுக்காக போராடாமல், தேர்தல் நேரத்தில் மட்டும் வருவேன், இல்லையேல் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வேன் என்றிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீர்கேடு. பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. அலிபாபா குகை போல உள்ளது.” இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருந்தார்.

NEXT STORY