மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு - வைரலாகும் புகைப்படம்

தமிழகம்
Updated Sep 02, 2019 | 13:11 IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் ஆகியோர் சந்தித்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actor Vijay met DMK leader M.K.stalin
Actor Vijay met DMK leader M.K.stalin  |  Photo Credit: Twitter

சென்னை: சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டுள்ளார்.

சென்னை தனியார் நட்சத்திர ஹோட்டலில் முரசொலி நிர்வாக இயக்குநர் முரசொலி செல்வத்தின் பேத்தி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டர். மேலும், இந்த விழாவில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், திமுக எம்.பி.,தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

நிச்சயதார்த்த விவாவுக்கு நடிகர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்துகொண்டார். அப்போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் ஆகியோருடன் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டார் நடிகர் விஜய். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Actor Vijay met DMK leader M.K.stalin

திரை உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளாா் விஜய். அவரது ரசிகர்கள் `விஜய் மக்கள் இயக்கம் ' என்ற பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கி விஜய் பிறந்த நாளின்போது நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்கள். விஜய் அரசியலுக்கு வருவது குறித்த விவாதங்கள் தற்போது உச்சத்தில் இருக்கும் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் ஆகியோர் சந்தித்துக்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

 

 

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தால் அதனை தான் வரவேற்பதாகவும், ரஜினிக்கு அடுத்த நிலையில் விஜய் இருப்பதாகவும் நாம் தமிழர் சீமான் சமீபத்தில் குறிப்பிட்டிந்தார். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...