இலவச ஹெல்மெட் வழங்கினால் அவர்களே உண்மையான "காப்பான்"

தமிழகம்
Updated Sep 15, 2019 | 12:44 IST | சு.கார்த்திகேயன்

நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படம் வெளியாகும் நாளன்று நெல்லை மாவட்ட ரசிகர்கள் பேனர், கட் அவுட்டுக்கு பதில் 200 ஹெல்மெட் வழங்க முன்வந்துள்ளனர். 

Actor suriya, Arjun Saravanan, Deputy commissioner of police Tirunelveli
Actor suriya, Arjun Saravanan, Deputy commissioner of police Tirunelveli   |  Photo Credit: Twitter

நெல்லை: நெல்லை துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் வேண்டுகோளை ஏற்று நடிகர் சூர்யாவின் நெல்லை மாவட்ட ரசிகர்கள் பேனர், கட் அவுட்டுக்கு பதில் 200 ஹெல்மெட் வழங்க முன்வந்துள்ளனர். 

சென்னை பள்ளிகரணையில் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்துக்காக வைத்திருந்த பேனரால்தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 

அதன் எதிரொலியாக அரசியல் கட்சித் தலைவர்கள் இனி பேனர், கட் அவுட்டுகளை வைக்க வேண்டாம் என தங்களது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதற்கிடையில், 'காப்பான்' திரைப்பட விழாவில் பேசிய நடிகர் சூர்யா, ரசிகர்கள் எந்த ஊரிலும் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன் சரவணன், புதிய திரைப்படம் வெளியாகும் போது பிளக்ஸ் பேனர், கட்அவுட் வைப்பதிற்கு பதிலாக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான "ஹெல்மட்" வழங்கினால் அவர்களே உடனடியாக உண்மையான "காப்பான்" ஆக முடியும் என தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

 

அவரது வேண்டுகோளை ஏற்று நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படம் வெளியாகும் நாளன்று நெல்லை மாவட்ட ரசிகர்கள் பேனர், கட் அவுட்டுக்கு பதில் 200 ஹெல்மெட் வழங்க முன்வந்துள்ளனர். 

NEXT STORY