நீங்கள் சாதித்துவிட்டீர்கள்! மோடிக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்

தமிழகம்
Updated May 23, 2019 | 15:18 IST | Times Now

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார்.

பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த்
பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த்  |  Photo Credit: Times Now

சென்னை: மக்களவைத் தேர்தலில் நீங்கள் சாதித்துவிட்டீர்கள் என குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

17-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே -19 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.  மொத்தம் 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தை பொறுத்த வரை வேலூர் தொகுதி நீங்கலாக 38 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. அதோடு காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 350 -க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகிப்பதால் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சி அமையும் சூழல் எழுந்துள்ளது.

 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: "மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். மக்களவை தேர்தலில் நீங்கள் சாதித்துவிட்டீர்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்"  இவ்வாறு ரஜினி பதிவிட்டுள்ளார்.

இதேபோல், பிரதமர் மோடிக்கு தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வாழ்த்து கூறியுள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் " 2019 தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு 2-ம் முறை பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு இதயமார்ந்த வாழ்த்து" என கூறியுள்ளார்.

NEXT STORY
நீங்கள் சாதித்துவிட்டீர்கள்! மோடிக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் Description: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறியுள்ளார்.
Loading...
Loading...
Loading...