தமிழக அரசியல் மையமாக போயஸ் கார்டன் வருமா? - ரஜினி பதில்

தமிழகம்
Updated Aug 14, 2019 | 20:10 IST | Times Now

காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் ராஜதந்திரத்தோடு கையாண்டு இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் இருவரையும் பாராட்டினேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Actor Rajinikanth, நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழக அரசியல் மையமாக மீண்டும் போயஸ் கார்டன் வருமா? என்ற கேள்விக்கு காத்திருந்து பாருங்கள் என்றார் ரஜினிகாந்த். 

துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு பற்றிய புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் சமீபத்தில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள் என பேசியிருந்தார். ரஜினியின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையானது. 

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. பயங்கரவாதிகள், தீவிரவாதிகளின் தாய் வீடாக காஷ்மீர் இருந்தது. இந்த விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் ராஜதந்திரத்தோடு கையாண்டு இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் இருவரையும் பாராட்டினேன். ஆதரவு குறைவாக இருக்கும் மாநிலங்களவையில் முதலில் மசோதாவை நிறைவேற்றி விட்டு பின்னர் மக்களவையில் நிறைவேற்றியுள்ளனர். சில அரசியல்வாதிகள் எதை அரசியலாக்கனும் எதை அரசியலாக்க கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால் தான் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கையை பாரட்டினேன்" எனத் தெரிவித்தார்.

மேலும், "தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தின் அரசியல் மையமாக போயஸ் கார்டன் மீணடும் வருமா ? என்பதை காத்திருந்து பாருங்கள். கட்சி அறிவிப்பு எப்போது என்பதை கண்டிப்பாக ஊடகங்கள் முன்பு தெரிவிப்பேன்" என்றார். 

NEXT STORY
தமிழக அரசியல் மையமாக போயஸ் கார்டன் வருமா? - ரஜினி பதில் Description: காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் ராஜதந்திரத்தோடு கையாண்டு இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் இருவரையும் பாராட்டினேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...