நடிகர் ராதாரவி மீண்டும் அஇஅதிமுகவில் இணைந்தார்!

தமிழகம்
Updated Jun 12, 2019 | 16:20 IST | Times Now

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ராதாரவி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அஇஅதிமுவில் மீண்டும் இணைந்தார்.

நடிகர் ராதாரவி மீண்டும் அஇஅதிமுகவில் இணைந்தார்
நடிகர் ராதாரவி மீண்டும் அஇஅதிமுகவில் இணைந்தார்  |  Photo Credit: Twitter

சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ராதாரவி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அஇஅதிமுவில் மீண்டும் இணைந்தார். மக்களவை மற்றும் 22 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அஇஅதிமுகவில் இருந்து விலகிச் சென்ற பலர் மீண்டும் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் தவிர்த்து தமிழகத்தில் நடைபெற்ற 38 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றிபெற்றது. தேனி மக்களவைத் தொகுதியில் மட்டும் அஇஅதிமுக வெற்றிபெற்றது. எனினும், 22 சட்டப்பேரவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும், அஇஅதிமுக 9 இடங்களிலும் வெற்றிபெற்றன. இதனால், ஆட்சியை தொடரும்  நிலையுடன் அஇஅதிமுக தற்போது உள்ளது.

இதனையடுத்து, டிடிவி தினகரன் தலைமையிலான அமுமுகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ.மைக்கல் ராயப்பன், திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் அஇஅதிமுகவில் இணைந்தனர். 

இந்நிலையில்,  நடிகரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ராதாரவி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அஇஅதிமுவில் மீண்டும் இணைந்தார். நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால், ராதாரவி அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

NEXT STORY