ஏசி கசிவா? திட்டமிட்ட கொலையா? - திண்டிவனம் மின்கசிவு மரணங்களில் திடீர் திருப்பம்!

தமிழகம்
Updated May 16, 2019 | 18:03 IST | Times Now

ஏசி மின் கசிவு தீயே உயிரிழப்பு காரணம் எனக் கூறப்பட்டாலும், ராஜின் உடலில் இருந்து வழிந்திருந்த ரத்தம் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

tamil nadu, தமிழ்நாடு
மாதிரிப்படம் 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஏசி மின்கசிவு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சுற்றுப்புற சூழல் தடயங்கள் இந்த மரணங்கள், கொலையாக இருக்கலாம் என காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அருகே காவேரிப்பாக்கத்தில் வசித்த ராஜ் என்பவர் மனைவி கலைச்செல்வி, இளைய மகன் கெளதமனுடன் ஏசி பொருத்தப்பட்டிருந்த அறையில் இரவு உறங்கியுள்ளார். அப்போது, நள்ளிரவில் திடீரென்று ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு மூவரும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

எனினும், ஏசி மின் கசிவு தீயே உயிரிழப்பு காரணம் எனக் கூறப்பட்டாலும், ராஜின் உடலில் இருந்து வழிந்திருந்த ரத்தம் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர் உடலில் ரத்தம் எப்படி வெளியேறியிருக்கும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், அவர்களது அறைக்கு அருகில் கிடந்த காலி மண்ணெண்ணெய் கேனும் போலீசாரின் சந்தேகத்தை தீவிரமாக்கியுள்ளது. 

எனவே, ஏசி மின்கசிவே திட்டமிடப்பட்டதாக இருக்கலாம் என்றும், எரிந்த நிலையில் வெளியே ஓடிவந்த ராஜை தாக்கியிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்த ராஜூவுக்கு இரண்டு மகன்கள். ராஜூவின் சொத்து மதிப்பும் மிக அதிகம். கெளதமுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் சொத்துப் பிரச்சினைக்காக அவர்கள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த அறையில் தீ எரிந்தபோது, ராஜூவின் மூத்த மகன் கோவர்த்தனனும், அவரது மனைவியும் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும், அவர்கள் தற்போது மூச்சுத்திணறலால் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
ஏசி கசிவா? திட்டமிட்ட கொலையா? - திண்டிவனம் மின்கசிவு மரணங்களில் திடீர் திருப்பம்! Description: ஏசி மின் கசிவு தீயே உயிரிழப்பு காரணம் எனக் கூறப்பட்டாலும், ராஜின் உடலில் இருந்து வழிந்திருந்த ரத்தம் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola