ஆவின் தயிர், நெய், வெண்ணெய், பால்கோவா விலை உயர்வு

தமிழகம்
Updated Sep 15, 2019 | 14:05 IST | Times Now

ஆவின் நிறுவனம் சார்பில் தயாரித்து விற்பனை செய்யப்படும் தயிர், நெய், வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Aavin Ghee, ஆவின் நெய்
Aavin Ghee, ஆவின் நெய் 

சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

ஆவின் பால் விலை மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்திய தமிழக அரசு, கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் அதனை அமல்படுத்தியது.  இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.  இந்நிலையில், ஆவின் நிறுவனம் சார்பில் தயாரித்து விற்பனை செய்யப்படும் தயிர், நெய், வெண்ணெய், பால் பவுடர், பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

  • பால் பவுடர் கிலோவுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.330 ஆக
  • பால்கோவா கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.520 ஆக நிர்ணயம்
  • அரை லிட்டர் தயிர் ரூ.2 உயர்ந்து ரூ.27 ஆக நிர்ணயம் 
  • நெய் லிட்டருக்கு ரூ. 35 அதிகரித்து ரூ.495 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பன்னீரின் விலை ஒரு கிலோ ரூ.400-ல் இருந்து ரூ.450 ஆகியுள்ளது.
  • வெண்ணெய் அரை கிலோ ரூ.10 உயர்ந்து ரூ.240 ஆக நிர்ணயம்.

பால் விலை உயர்வால், பால் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வானது வரும் புதன்கிழமை (செப்டம்பர் 18) முதல் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


 

NEXT STORY