'தமிழ் வாழ்க’ - ட்விட்டர் ட்ரெண்டிங்கை தெறிக்க விடும் தமிழக எம்.பிக்களின் முழக்கம்!

தமிழகம்
Updated Jun 18, 2019 | 18:44 IST | Times Now

#தமிழ்_வாழ்க என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

india, இந்தியா
தமிழ் வாழ்க ட்விட்டர் ட்ரெண்ட்  |  Photo Credit: Twitter

சென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து வெற்றிபெற்ற எம்.பிக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

அனைவருமே அழகு தமிழில் பதவியேற்றக்கொண்டதாலும், தமிழுக்கு புகழ் சேர்க்கும் வகையிலான வாசகங்களை கூறியதாலும் #தமிழ்_வாழ்க என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

நடந்து முடிந்த 17வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய மக்களவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழா இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 39 எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

நிகழ்வின் ஹைலைட்ட்டாக பதவியேற்ற அனைத்து தமிழ் எம்பிக்களும், தமிழ் மொழியிலேயே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அதில் அதிமுக எம்.பியான ஓ.பி.ரவீந்திரனும் அடக்கம்.

திருவள்ளூர் தனித் தொகுதி எம்.பி ஜெயக்குமார் முதலில் பதவியேற்று ‘அம்பேத்கர் வாழ்க’என்று முழங்கினார். தொடர்ந்து பதவியேற்ற அனைவரும் தமிழ் வாழ்க, வெல்க தமிழ், திராவிடம் வாழ்க, பெரியார் வாழ்க என்னும் வாக்கியங்களுடனே பதவியேற்றனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக எம்பிக்களின் பதவியேற்பு விழா வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் மொழியில் பதவியேற்ற எம்பிக்களுக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து தமிழ் வாழ்க என்னும் ஹேஷ்டேக்கும் ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
'தமிழ் வாழ்க’ - ட்விட்டர் ட்ரெண்டிங்கை தெறிக்க விடும் தமிழக எம்.பிக்களின் முழக்கம்! Description: #தமிழ்_வாழ்க என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles