சென்னையில் பேனர் சரிந்து விழுந்ததில் லாரி மோதி இளம்பெண் பலி

தமிழகம்
Updated Sep 12, 2019 | 19:06 IST | Times Now

சென்னையில் பேனர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

A 23- year-old girl, lost her life in an accident
A 23- year-old girl, lost her life in an accident   |  Photo Credit: Twitter

சென்னை: சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது பேனர் சரிந்து விழுந்தது. இதிதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த பெண் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறி உயிரிழந்தார். 

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் சுபஸ்ரீ (23). இவர் பள்ளிக்கரணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அந்த சாலையின் நடுவில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் அவரது மகன் திருமணத்திற்காக பேனர்கள் வைத்திருந்தார். அவற்றில் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ மீது சரிந்து விழுந்தது. இதனால், இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் கட்சிகள், திருவிழா மற்றும் திருமண நிகழ்ச்சிகளின் போது விளம்பர பேனர்கள் வைக்கப்படும் பட்சத்தில் சாலைகளில் வாகன போக்குவரத்து நெருக்கடி மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு போன்றவை ஏற்படுகிறது. ஆதலால் பேனர் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த தடையையும் மீறி திருமண நிகழ்சிக்காக வைக்கப்பட்ட பேனர் இளம் பெண்ணின் உயிரை பறித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...