தமிழகத்தில் பரவும் டெங்கு; கடலூரில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி!

தமிழகம்
Updated Sep 09, 2019 | 20:21 IST | Times Now

டெங்கு காய்ச்சல் பரவுவதையும் அதன் பாதிப்பையும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல்,9 people diagnosed of Dengue fever in Cuddalore
கடலூரில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல்  |  Photo Credit: Twitter

கடலூரில் அரசு மருத்துவமனையில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு பரவுவதற்கான அபாயம் இருப்பதாக தெரியவருகிறது.

கடலூர் மாவட்டத்தில் திடீரென 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் உள்ளவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தினமும் 3 அல்லது 4 பேர் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்படுவதாக அம்மருத்துவமனையின் டீன் தெரிவித்துள்ளார்.  

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதனை பற்றி கூறுகையில் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்றும்  அங்கு வரும் காய்ச்சல் பாதித்த நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சராசரியாக 4 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர் என்று அவர் கூறினார். மேலும் அரசுடன் பொதுமக்களும் ஒன்று சேர்ந்து  செயல்பட்டால் டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும் தற்போது சுகாதார துறை அதிகாரிகள் சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வீட்டின் அருகில் மழை நீர் தேங்கி விடாமல் பத்துக்கொள்ளவும், குடிநீர் பாத்திரங்களை மூடிவைக்கவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.        
     
NEXT STORY
தமிழகத்தில் பரவும் டெங்கு; கடலூரில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி! Description: டெங்கு காய்ச்சல் பரவுவதையும் அதன் பாதிப்பையும் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை