சென்னை: 7 வயது சிறுவன் வாயில் 526 பற்கள்: உலகில் இதுவே முதல்முறையாம்!

தமிழகம்
Updated Aug 01, 2019 | 19:58 IST | Times Now

சென்னையில் 7 வயது சிறுவன் வாயில் 526 பற்களை மருத்துவர்கள் நீக்கியுள்ளார்கள்

நீக்கப்பட்ட 526 பற்கள்
நீக்கப்பட்ட 526 பற்கள்  |  Photo Credit: ANI

சென்னையை சேர்ந்தவர் பிரபுதாஸ். இவரது மகனுக்கு 3 வயதில் இருந்தே தாடையின் வலது பக்கத்தில் வீக்கமாக இருந்துள்ளது. அப்போது வலி ஏற்படவே பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் கான்பித்தனர். அப்போது மருத்துவர்கள் ஏதும் சொல்லாமல் அனுப்பிவிட்டனராம். நாளுக்கு நாள் வலி அதிகமானதோடு அந்த வீக்கம் கட்டி போலவே வளரத் தொடங்கி உள்ளது. 

தற்போது சிறுவனுக்கு 7 வயது ஆகிறது. தாங்க முடியாத வலியால் அவதிப்பட்ட சிறுவனை மருத்துவமனையில் சேர்த்து சிடி ஸ்கேன் எடுத்துப்பாத்ததில் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கட்டி என்று நினைத்த இடத்தில் சிறியதும் பெரியதுமாக மொத்தம் 526 பற்கள் இருந்திருக்கின்றன. சுமார் 5 மணி நேர ஆபரேஷனுக்குப் பிறகு சிறுவனின் வாயில் இருந்த 526 பற்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளார்கள். 

இதற்கு முன்னால் 2014ஆம் ஆண்டு மும்பையில் 17 வயதுடைய ஒருவரது வாயில் 232 பற்கள் இருந்ததே அதிகமாம். இதனால் இந்த சிறுவந்தான் தற்போது வாயில் அதிக பல்லுடன் பிறந்துள்ளான் என்று மருத்துவர்கள் ஆச்சர்யத்துடன் கூறுகிறார்கள்!

NEXT STORY
சென்னை: 7 வயது சிறுவன் வாயில் 526 பற்கள்: உலகில் இதுவே முதல்முறையாம்! Description: சென்னையில் 7 வயது சிறுவன் வாயில் 526 பற்களை மருத்துவர்கள் நீக்கியுள்ளார்கள்
loadingLoading...
loadingLoading...
loadingLoading...