சென்னை வந்தடைந்தது 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் "குடிநீர் ரயில்"

தமிழகம்
Updated Jul 12, 2019 | 13:55 IST | Times Now

வாழைத் தோரணங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தண்ணீர் ரயில் சென்னைக்கு வந்தடைந்தது.

train carrying water from Jolarpet
train carrying water from Jolarpet  |  Photo Credit: ANI

சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் புறப்பட்ட ரயில் இன்று முற்பகல் 11.30 மணி அளவில் சென்னை, வில்லிவாக்கத்துக்கு வந்தடைந்தது.

சென்னையில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் ஒரு கோடி லிட்டர் குடிநீரை ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.65 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி பணிகளை மேற்கொண்டது.

முதலில் மேட்டுசக்கர குப்பத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வரை குழாய்கள் அமைக்கப்பட்டன. இதையடுத்து சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டது.  சில இடங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. அதை சரிசெய்த பின்னர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தண்ணீர் வந்து சேர்ந்தது.

carrying water from Jolarpetஇதையடுத்து 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயிலில் ஏற்றப்பட்டது. அந்த ரயில் இன்று காலை 7 மணியளவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு பயணமானது. முன்னதாக வாழைத் தோரணங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ரயிலுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் கொடியசைத்து ரயிலை அனுப்பி வைத்தார். 

carrying water from Jolarpet

இந்த ரயில் சென்னை, வில்லிவாக்கத்துக்கு 11.30 மணி அளவில் வந்து சேர்ந்தது. அந்த தண்ணீர் அங்கிருந்து குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் சுத்திகரிக்கப்பட்டு விரைவில் அந்த தண்ணீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 

NEXT STORY
சென்னை வந்தடைந்தது 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் "குடிநீர் ரயில்" Description: வாழைத் தோரணங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தண்ணீர் ரயில் சென்னைக்கு வந்தடைந்தது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles