பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து; 4 மாணவர்கள் காயம்!

தமிழகம்
Updated Aug 13, 2019 | 17:25 IST | Times News Network

திருச்செந்தூர் அருகே பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 4 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

4 students injured because of School rooftop collapse
பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து!  |  Photo Credit: Twitter

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே அரசு நிதிவுதவி பெரும் ஆர்.சி தொடக்கப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 4 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்.   

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலி நகரில் அரசு நிதிவுதவி பெரும் ஆர்.சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்ட இந்த தொடக்கப்பள்ளியில் கிட்டத்தட்ட 140-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றி வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல இன்று வகுப்புகள் நடந்து கொன்றிருந்த போது, திடீரென கட்டிடத்தில் இருந்து மூன்றாம் வகுப்பின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் அங்கிருந்த மாணவர்களில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு திருச்செந்தூரில் உள்ள  தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தலையிலும் பிற பகுதிகளில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யாருக்கும் பெரும் ஆபத்து எதுவும் நேரவில்லை. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மருத்துவமனைக்கு சென்று மாணவர்களின் உடல்நலத்தை விசாரித்தார். மேலும் பள்ளியின் தரத்தை குறித்து அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்கள் குழந்தைகளை அழைத்து சென்றனர். மேலும் இச்சம்பவத்தால் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளி கட்டப்பட்டு ஒரு வருடமே ஆன நிலையில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது, கட்டிடத்தின் தரத்தை பற்றி கேள்வி எழுப்புகிறது. மேலும் இது போன்ற பள்ளிகளின் தரத்தையும் மாணவர்களின் பாதுகாப்பையும்  அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர்.                
 

NEXT STORY
பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து; 4 மாணவர்கள் காயம்! Description: திருச்செந்தூர் அருகே பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 4 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...