காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம்: கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு

தமிழகம்
Updated Jul 18, 2019 | 18:41 IST | Times Now

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் காஞ்சிபுரத்தில் அலைமோதுகிறது.

Athi Varadar
Athi Varadar  |  Photo Credit: Twitter

காஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்ட ஒரு பெண் உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய அத்திவரதர் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

வரதராஜ பெருமாள் கோவிலின் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். அவரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்து செல்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு தரிசனம் தொடங்குகிறது. ஆனால், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் காத்து இருக்கின்றனர். இதனால் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் இன்றும் அத்திவரதரை தரிசிக்க ஏராளமானோர் வந்திருந்தனர். கூட்டத்தில் சிக்கிய பலர் மயங்கி கீழே விழுந்தனர். உடனடியாக மருத்துவகுழு அவர்களுக்கு சிகிச்சை அளித்தது. இதற்கிடையில் அத்திவரதரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த போது மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த ஒரு பெண் உள்பட 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்கள் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...