தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? ப.சிதம்பரம் ட்வீட்

தமிழகம்
Updated Jul 10, 2019 | 11:01 IST | Times Now

தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144.

Congress leader P Chidambaram
Congress leader P Chidambaram  |  Photo Credit: PTI

சென்னை: மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 1993-ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் கழிவுகளை அகற்றும் பணியின் போது மட்டும் 620 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 144 பேரும், குஜராத்தில் 131 பேரும், கர்நாடகாவில் 75 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 71 பேரும், ஹரியானாவில் 51 பேரும் உயிரிழந்துள்ளதாக மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல்  உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144. இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு என்பது வெட்கக்கேடு. மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா?. உயிரிழந்த 144 மனிதர்கள் எந்தச் சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என்று விசாரித்துப் பாருங்களேன்" என்று தெரிவித்துள்ளார்.
 

NEXT STORY
தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? ப.சிதம்பரம் ட்வீட் Description: தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles