மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு

தமிழகம்
Updated Sep 16, 2019 | 19:25 IST | சு.கார்த்திகேயன்

ஏற்கனவே மார்ச் 17-ந் தேதி முதல் ஏப்ரல் 9-ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு  |  Photo Credit: Twitter

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்கம் இன்று வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டிருந்தது. இதற்கிடையில் மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடத்திற்க்கான இருதாள்கள் ஒரே தாளாக மாற்றியதை அடுத்து புதிய அட்டவணையை தமிழக அரசுத்தேர்வுகள் துறை இயக்குநர் இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அட்டவணையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி முடிவடைகிறது. அனைத்து தேர்வுகளின் முடிவுகளும் மே 4 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

  • மார்ச் 27 ஆம் தேதி மொழிப்பாடம்
  • மார்ச் 28 ஆம் தேதி விருப்ப பாடம்
  • மார்ச் 31 ஆம் தேதி ஆங்கிலம் 
  • ஏப்ரல் 4  ஆம் தேதி சமூக அறிவியல்
  • ஏப்ரல் 7 ஆம் தேதி அறிவியல்
  • ஏப்ரல் 13 ஆம் தேதி கணிதம் 
NEXT STORY