சாலையில் கிடந்த 1.56 கோடி பணம் - நந்தனம் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை போன பணமாம்!

தமிழகம்
Updated May 27, 2019 | 17:45 IST | Times Now

சந்தேகத்தின்பேரில் வந்த வாகனம் ஒன்றினை காவலர்கள் நிறுத்தியுள்ளனர். ஏனெனில், அவர் அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் மூன்று முறை பயணித்துள்ளார்.

chennai city, சென்னை
கைப்பற்றப்பட்ட பணம்  |  Photo Credit: Twitter

சென்னை: சென்னையில் கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட பணம் குறித்த திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 

சென்னை கோட்டூர்புரத்தில், அச்சரக காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் வழக்கம்போல ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வாகனங்களைச் சோதனையிடும் பணியில் மும்முரமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகத்தின்பேரில் வந்த வாகனம் ஒன்றினை காவலர்கள் நிறுத்தியுள்ளனர். ஏனெனில், அவர் அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் மூன்று முறை பயணித்துள்ளார்.

ஆனால், அந்த நபர் வாகனத்தை நிறுத்தாமல் வண்டியில் இருந்த மூன்று மூட்டைகள் போன்ற பைகளை மட்டும் ரோட்டில் எறிந்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். 

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த மூட்டைகளைச் சோதனையிட்டனர். அதில் 1 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் பணம் இருந்தது.

இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர். கைப்பற்றப்பட்ட பணமும் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சாலையில் வீசப்பட்ட அந்த பணம் சென்னை நந்தனத்தில் வசித்து வரும் கட்டுமானத் தொழிலதிபர் பாலசுப்ரமணியன் என்பவரது பணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாலசுப்ரமணியம் கொல்கத்தா சென்றிருந்த நிலையில் அவரது வீட்டில் நேற்றிரவு கொள்ளையர்கள் புகுந்தி இந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அதைக் கொண்டு செல்லும்போதுதான் கொள்ளையர்களில் ஒருவர் காவல்துறையினர் கண்களில் சிக்கி அந்தப் பணத்தை தெருவில் வீசிச் சென்றுள்ளான். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கொள்ளையர்களைத் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
சாலையில் கிடந்த 1.56 கோடி பணம் - நந்தனம் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை போன பணமாம்! Description: சந்தேகத்தின்பேரில் வந்த வாகனம் ஒன்றினை காவலர்கள் நிறுத்தியுள்ளனர். ஏனெனில், அவர் அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் மூன்று முறை பயணித்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
வேலூர், திருவள்ளூர், தென் தமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மார்ச் 27-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: புதிய அட்டவணை வெளியீடு
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
மிரட்டல் கடிதம்! வரும் 30 ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்டில் குண்டு வெடிக்கும்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
சைக்கிளில் வந்த சிறுவனுக்கு ஹெல்மெட் அணியாததால் அபராதமா? காவல்துறையினர் விளக்கம்
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு குழு ஆலோசனை