'அ..ஆ’ கிள்ளை மொழியில் ரிஷப்புக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் ஸிவா தோனி!

விளையாட்டு
Updated May 11, 2019 | 21:48 IST | Times Now

தல தோனியின் குட்டி மகளான ஸிவா தோனி, டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் இளம் வீரரான ரிஷப்புக்கு கைகால்களை அழகாக அசைத்து அசைத்து அ, ஆ, இ, ஈ என கொஞ்சும் கிள்ளை மொழியில் தமிழ் கற்றுக் கொடுக்கிறார். 

IPL 2019, ஐபிஎல் 2019
தோனியுடன் ஸிவா  |  Photo Credit: Twitter

விசாகப்பட்டினம்: இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்டுக்கு, கேப்டன் தோனியின் செல்ல மகள் ஸிவா தோனி தமிழ் கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விசாகப்பட்டினத்தில் குவாலியர் 2 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் நாளை ஐபிஎல் பைனல்ஸில் சிஎஸ்கே அணி, மும்பை இண்டியன்ஸை களத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Meet Pant's Hindi Teacher - Ziva the Diva!?? @rishabpant @mahi7781 #Dhoni #MSDhoni #WhistlePodu

A post shared by MS Dhoni / Mahi7781 (@msdhonifansofficial) on

 

இந்நிலையில் தல தோனியின் குட்டி மகளான ஸிவா தோனி, டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் இளம் வீரரான ரிஷப்புக்கு கைகால்களை அழகாக அசைத்து அசைத்து அ, ஆ, இ, ஈ என கொஞ்சும் கிள்ளை மொழியில் தமிழ் கற்றுக் கொடுக்கிறார். 

ஸிவா சொல்லிக் கொடுப்பதை ரிஷப்பும் அப்படியே உச்சரித்து நல்ல மாணவராக நடந்து கொள்கிறார். இந்த வீடியோவை தோனி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஸிவா-தோனியின் ரசிக விசிறிகள் இந்த வீடியோவை ஷேர் செய்து மகிழ்ந்து வருகின்றனர். 

NEXT STORY
'அ..ஆ’ கிள்ளை மொழியில் ரிஷப்புக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் ஸிவா தோனி! Description: தல தோனியின் குட்டி மகளான ஸிவா தோனி, டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் இளம் வீரரான ரிஷப்புக்கு கைகால்களை அழகாக அசைத்து அசைத்து அ, ஆ, இ, ஈ என கொஞ்சும் கிள்ளை மொழியில் தமிழ் கற்றுக் கொடுக்கிறார். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola