பாகிஸ்தான் போட்டியின்போது தோனி மகளுடன் ரிஷப் பந்த்: வைரலாகும் வீடியோ!

விளையாட்டு
Updated Jun 17, 2019 | 13:55 IST | Times Now

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின்போது, இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்துடன், தோனியின் மகள் ஷிவா தோனி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

தோனி மகளுடன் ரிஷப் பந்த் விளையாடும் வைரல் வீடியோ
தோனி மகளுடன் ரிஷப் பந்த் விளையாடும் வைரல் வீடியோ  |  Photo Credit: Instagram

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின்போது, இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்துடன், தோனியின் மகள் ஷிவா தோனி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்ததே இல்லை என்ற சாதனையை தொடர்ந்து வருகிறது இந்திய அணி. இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் 7 முறை பாகிஸ்தானை எதிர்கொண்டுள்ள இந்திய அணி அனைத்திலும் வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணியின் வெற்றி ரசிகர்களிடையே மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரசிகர்களை மட்டுமின்றி, இப்போட்டியில் இந்தியா வெற்றிபெறும் நிலையில் இருந்தபோது, தோனி மகள் ஷிவா தோனி மகிழ்ச்சி ஆட்டம் போட்டார். போட்டியின்போது மைதானத்தில் பார்வையாளர்கள் அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பந்துடன், தோனி மகள் ஷிவா தோனி விளையாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Partners in crime ? @ziva_singh_dhoni

A post shared by Rishabh Pant (@rishabpant) on


உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, இதுவரை 5 போட்டிகளில்  3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால், அடுத்த 4 போட்டிகளிலும் சிறப்பான வெற்றியை பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

NEXT STORY
பாகிஸ்தான் போட்டியின்போது தோனி மகளுடன் ரிஷப் பந்த்: வைரலாகும் வீடியோ! Description: பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின்போது, இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்துடன், தோனியின் மகள் ஷிவா தோனி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola