ரெய்னாவிற்கு முத்தம் கொடுத்து...பிராவோவிற்கு தொப்பி போட சொல்லிக் கொடுத்து அசத்திய ஸிவா தோனி!

விளையாட்டு
Updated Apr 14, 2019 | 21:51 IST | Times Now

4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய தாஹிருக்கு அழகான கோப்பை ஒன்றை தனது பிஞ்சுக்கைகளால் பரிசளித்தார்.

IPL 2019, ஐபிஎல் 2019
தந்தை தோனியுடன் ஸிவா தோனி  |  Photo Credit: Twitter

சென்னை: ஐபிஎல் லீக்கின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை, சென்னை சூப்பர் கிங்ஸ் 162 ரன்கள் எடுத்து வீழ்த்தியது. ஆனால், களத்தில் இன்று மேட்ச்சை விட ஹைலெட் ஆனது கேப்டன் தோனியின் குட்டி மகளான ஸிவா தோனிதான்.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக்கின் 29வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது சிஎஸ்கே. ஆட்டம் முடிந்தவுடன் இன்றைய ஆட்டத்திற்கான சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

அப்போது, தந்தை தோனியின் கைகளைப் பிடித்துக்கொண்டு வெள்ளை நிற டாப்ஸ், குட்டி நீலநிற பேண்ட் அணிந்து தளிர் நடை நடந்து மைதானத்தில் நுழைந்த ஸிவா தோனி ‘சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷன்’ ஆனார். 

CSK

இன்றைய மேட்ச்சில் அரை சதம் அடித்து சிஎஸ்கேவை ஜெயிக்க வைத்த ‘சின்ன தல’ ரெய்னாவிற்கு ஒரு அட்டகாசமான முத்தத்தை பரிசாக அளித்தார் குட்டி ஏஞ்சல் ஸிவா.

கூடவே, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய தாஹிருக்கு அழகான கோப்பை ஒன்றை தனது பிஞ்சுக்கைகளால் பரிசளித்தார். தந்தை தோனி பக்கத்தில் யாருடனோ பேசிக்கொண்டிருக்க, பிராவோவிற்கு சிஎஸ்கே தொப்பியை எப்படி திருப்பி அணிய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். 

மழலையில் எதையோ பேசிய ஸிவாவை அன்போடு தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டார் பிராவோ. மொத்தத்தில் சிஎஸ்கே மேட்ச்சில் வெற்றி பெற்றதை விட ஸிவாவின் என்ட்ரிதான் இன்றைய ஆட்டத்தின் தெறி மாஸ்!

NEXT STORY
ரெய்னாவிற்கு முத்தம் கொடுத்து...பிராவோவிற்கு தொப்பி போட சொல்லிக் கொடுத்து அசத்திய ஸிவா தோனி! Description: 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய தாஹிருக்கு அழகான கோப்பை ஒன்றை தனது பிஞ்சுக்கைகளால் பரிசளித்தார்.
Loading...
Loading...
Loading...