குழந்தைகளுடன் வெற்றியைக் கொண்டாடிய அப்பாக்கள், மகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிய தோனி! - வீடியோ

விளையாட்டு
Updated May 11, 2019 | 13:09 IST | டைம்ஸ் நவ் தமிழ்

நேற்று நபோட்டி முடிந்து தோனி, ரெய்னா இருவரும் தங்களது மகள்களுடன் விளையாடிய வீடியோக்கள்தான் மேட்சையும் தாண்டி வைரலாகப் போய்க்கொண்டு இருக்கிறது!

ziva dhoni and Gracia Raina playing with dhoni and raina breaks the internet - videos
ziva dhoni and Gracia Raina playing with dhoni and raina breaks the internet - videos  |  Photo Credit: Twitter

ஐபிஎல் குவாலிபையர் 2 ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். நேற்று விறுவிறுப்பாக சென்ற மேட்சின் ஹைலைட்ஸே போட்டி முடிந்தபிறகு மைதானத்தில் விளையாடிய வீரர்களின் குட்டி சுட்டீஸ்தான் சி.எஸ்.கே அணியில் பெரும்பாலும் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான். இதனாலேயே அவர்களுக்கு அப்பாக்கள் ஆர்மி (Dads Army) என்று கிண்டலடிப்பார்கள். இதனை தோனியும் பலமுறை சிரித்துக்கொண்டே சொல்வார். ஆனால் இந்த அப்பாக்கள் ஆர்மிதான் 10 ஐபிஎல் தொடரில் எட்டு ஐபில்ல்-இல் இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளது. 

சிஎஸ்கேவை விக்ரமன் படம் என்று கூற அவர்களது குழந்தைகள் மற்றும் அம்மாக்களும் முக்கியக்காரணம். ரெய்னாவும் தோனியும் எவ்வளவு நெருக்கமோ அதேபோலதான் ரெய்னாவின் மனைவியும் தோனியின் மனைவியும். ஏன் அவர்களது குழதைகளும்தான்! தாஹீரின் பையனிடமும், வாட்சனின் பையனிடம் யார் பிடித்த வீரர் என்றால் பெரியப்பா போல இருக்கும் தோனியைதான் கைகாட்டுவார்கள். இப்படி ஒரு டீமாக மட்டும் இல்லாமல் குடும்பமாக இருப்பதுதான் சிஎஸ்கேவின் வெற்றி என்று அந்த அணி வீரர்கள் நம்புகிறார்கள். நேற்று போட்டி முடிந்ததும் வீரர்களின் குழந்தைகள் மைதானத்துக்குள் நிழைத்து விளையாடியது, தோனிக்கு ஸிவா தோனி முத்தம் கொடுத்தது, தோனி அவர்களைடம் ஓடிப்பிடித்து விளையாடியது என போட்டியைவிட இவர்களது வீடியோ வைரல் ஆனது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

போட்டி முடிந்தும் அரங்கில் இருந்து வெளியேறாமல், குழந்தைகள் விளையாடுவதையே ஆராவாரத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் ரசிகர்கள்... வெற்றியோ தோல்வியோ அனைத்தையும் விட குடும்பம்தான் முதலில் என்பது சிஎஸ்கேவின் சீக்ரெட். ஆம் அவர்களுக்கு சிஎஸ்கே டீமே ஒரு குடும்பம்தானே!  

 

NEXT STORY
குழந்தைகளுடன் வெற்றியைக் கொண்டாடிய அப்பாக்கள், மகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிய தோனி! - வீடியோ Description: நேற்று நபோட்டி முடிந்து தோனி, ரெய்னா இருவரும் தங்களது மகள்களுடன் விளையாடிய வீடியோக்கள்தான் மேட்சையும் தாண்டி வைரலாகப் போய்க்கொண்டு இருக்கிறது!
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles