ட்விட்டரில் உலக அளவிலான டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த யுவராஜ் சிங்

விளையாட்டு
Updated Jun 10, 2019 | 16:32 IST | Times Now

#YuvrajSingh என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

Yuvraj Singh announces retirement from International cricket
Yuvraj Singh announces retirement from International cricket  |  Photo Credit: PTI

மும்பை: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து  #YuvrajSingh என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. 

கிரிக்கெட் உலகில் அதிரடி ஆட்டக்காரர் என பெயர் எடுத்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கடந்த 2000-ம் ஆண்டு சாம்பியன் டிராபி போட்டியில் அறிமுகமானார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் போட்டியில் 80 பந்துகளுக்கு 84 ரன்கள் அடித்தார். 2011-ம் ஆண்டு யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் கேரியரில் மிக முக்கியமான காலகட்டமாக கருதப்படுகிறது. அந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் ஆல்ரவுண்டராக களமிறங்கிய யுவராஜ் "மேன் ஆஃப் தி மேட்ச்" பட்டம் வென்று அசத்தினார். 

உலகக் கோப்பைக்கு பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பிறகு அதிலிருந்து மீண்டு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார். இந்திய அணிக்காக 304 ஒரு நாள் போட்டிகளிலும், 40 டெஸ்ட் போட்டிகளிலும்,  58 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் யுவராஜ். 

ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்த வரையில் கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் டெல்லி அணியிலும், அதற்கு அடுத்து 2016-ம் ஆண்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடினார். இறுதியாக கடந்த ஐபிஎல் தொடரில் மிகவும் அடிப்படையான விலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். 

இந்நிலையில் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள யுவராஜ், இனி கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங் ஓய்வு அறிவித்ததைத் தொடர்ந்து #YuvrajSingh என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. 

NEXT STORY
ட்விட்டரில் உலக அளவிலான டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த யுவராஜ் சிங் Description: #YuvrajSingh என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles