'சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்’ - இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் அறிவிப்பு!

விளையாட்டு
Updated Jun 10, 2019 | 15:41 IST | Times Now

``கிரிக்கெட் எனக்கு வாழ்க்கையை அதிகமாக கற்றுக் கொடுத்துள்ளது. மிக முக்கியமாக போராடக் கற்றுக் கொடுத்தது” - யுவராஜ் சிங்

cricket, கிரிக்கெட்
யுவராஜ் சிங்  |  Photo Credit: Twitter

மும்பை: பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங், தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வந்த யுவராஜ் சிங், கிட்டதட்ட 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள், 58 இருபது ஓவர் போட்டிகள் என இந்தியாவிற்காக களம் கண்டுள்ளார்.

2007ம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டுகளில் இந்தியா பங்கேற்ற 20 மற்றும் 50 ஓவர் உலககோப்பை போட்டிகளில், இந்தியா கோப்பையை வெற்றி பெற மிக முக்கிய பங்காற்றியவர் யுவராஜ் சிங். மேலும், 2011ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ பட்டம் வென்றவர்.

 

 

இந்நிலையில் தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் யுவராஜ். இதுகுறித்து அவர், ``கிரிக்கெட் எனக்கு வாழ்க்கையை அதிகமாக கற்றுக் கொடுத்துள்ளது. மிக முக்கியமாக போராடக் கற்றுக் கொடுத்தது. எப்பொழுதெல்லாம் கீழே விழுந்தேனோ அப்போதெல்லாம் எழுந்து நிற்கவும், மீண்டும் முன்னோக்கி பயணிக்க ஊக்கம் கொடுத்துள்ளது. 2011ம் ஆண்டின் உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியதை மறக்க முடியாது. 28 ஆண்டுகள் கழித்து கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றது மகிழ்ச்சி. இந்திய அணிக்காக 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங். 

2011ம் ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு கேன்சர் இருப்பது கண்டறியப்பட்ட யுவராஜ் அதிலிருந்து தன்னம்பிக்கையுடன் மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
'சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்’ - இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் அறிவிப்பு! Description: ``கிரிக்கெட் எனக்கு வாழ்க்கையை அதிகமாக கற்றுக் கொடுத்துள்ளது. மிக முக்கியமாக போராடக் கற்றுக் கொடுத்தது” - யுவராஜ் சிங்
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles