ரிஷப் பண்டை விமர்சித்த கெவின் பீட்டர்சன்.. சரியான பதிலடி கொடுத்த யுவராஜ் சிங் !

விளையாட்டு
Updated Jul 11, 2019 | 13:23 IST | Times Now

அரையிறுதி போட்டியில் ரிஷப் பண்ட் அவுட் ஆனதை பற்றி விமர்சித்த கெவின் பீட்டர்சனுக்கு பதிலத்துள்ளார் யுவ்ராஜ் சிங்.

Yuvraj Singh replys to Pieterson's criticism on rishab pant
பண்டை விமர்சித்த பீட்டர்சனுக்கு பதிலளித்த யுவராஜ்  |  Photo Credit: AP

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ரிஷப் பண்ட் அவுட் ஆனதை தன் ட்விட்டர் பக்கத்தில் கெவின் பீட்டர்சன் விமர்சனம் செய்திருந்தார். அவரது டிவீட்டுக்கு யுவராஜ் சிங் பதிலதித்துள்ளார்.

நடப்பு உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா, விராட் கோலி , ராகுல் ஆகிய மூவரும் தல 1 ரன் மட்டுமே எடுத்து அரையிறுதி போட்டியில் அவுட்டானதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு பெரும் சவால் காத்திருந்தது. 3-வது ஒவேரில் 5 ரன்களுக்கு 2 விக்கெட் போன நிலையில் களம் இறங்கினார் ரிஷப் பண்ட். அவர் களம் இறங்கிய சற்று நேரத்தில் ராகுல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தனர். இதனால் பண்ட் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஆரம்பத்தில் சிறப்பாக ஆடிய பண்ட் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மிட்செல் சாண்ட்நர் ஓவரில் மிட் விக்கெட் பக்கம் தூக்கி அடிக்க முயன்று அவுட் ஆனார். பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் தேவை இல்லாமல் அடிக்க முயன்று தன் விக்கெட்டை பறிகொடுத்தார். இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், ரிஷப் பண்ட் இது போன்று செய்வதை எத்தனை முறை பார்த்திருக்கிறோம். இதனால் தான் ஆரம்பத்தில் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்று விமர்சித்துள்ளார்.

 

 

அவரது விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள யுவ்ராஜ் சிங், "பண்ட் 8 ஒருநாள் போட்டிகள் மட்டுமே ஆடியுள்ளார், அது அவர் தவறு இல்லை. அவர் இதில் கற்றுக்கொண்டு மேலும் முன்னேறுவார்" என்று கூறியுள்ளார். மேலும் அனைவருக்கும் அவரவர் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள உரிமை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 

 

பின்பு மீண்டும் யுவ்ராஜ் சிங்கிற்கு பதிலளித்துள்ள பீட்டர்சன், ரிஷப் பண்ட் இது போன்ற தவறை பல முறை செய்கிறார். அவர் விரைவில் கற்றுகொள்ளவர் என்று நம்புவோம் என்றும் தெரிவித்தார். 

 

 

உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறிய நிலையில் விரைவில் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அணியில் அவர் இடத்தை பண்ட் நிரப்புவார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இது போன்ற அவரது ஆட்டம் அனைவருக்கும் ஏமாற்றத்தையே அளிக்கிறது. யுவராஜ் சிங் கூறியது போல அவர் சீக்கிரம் தன் தவறுகளில் இருந்து கற்று கொள்வார் என்று நம்புவோம்.      

NEXT STORY
ரிஷப் பண்டை விமர்சித்த கெவின் பீட்டர்சன்.. சரியான பதிலடி கொடுத்த யுவராஜ் சிங் ! Description: அரையிறுதி போட்டியில் ரிஷப் பண்ட் அவுட் ஆனதை பற்றி விமர்சித்த கெவின் பீட்டர்சனுக்கு பதிலத்துள்ளார் யுவ்ராஜ் சிங்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola