உலக பாரா போட்டியில் வெண்கலம்; ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்ற மாரியப்பன் தங்கவேலு

விளையாட்டு
Updated Nov 15, 2019 | 12:45 IST | Times Now

இதன்மூலம் இருவரும் வரும் 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவிருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். 

மாரியப்பன் தங்கவேலு
மாரியப்பன் தங்கவேலு 

துபாயில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரியோவில் நடைபெற்ற பாரால் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்தவர் மாரியப்பன் தங்கவேலு. இவரது சாதனையைப் பாராட்டி 2017ஆம் வருடம் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

இவர் சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர். இவருக்கு ஐந்து வயது இருக்கையில் ஒரு விபத்தில் சிக்கி வலது காலில் முழங்காலுக்கு கீழே இருக்கும் பகுதியை இழந்துவிட்டார். இருப்பினும் சோந்துவிடாமல் சிறு வந்தில் இருந்தா விளையாட்டில் இருந்த ஆர்வத்தில் உயரம் தாண்டுதலுல் பயிற்சி பெற்று பல போட்டிகளில் தேசிய அளவில் வென்று தற்போது சர்வதேச மாற்றுதிறளிகளுக்கான விளையாட்டுப் போடிகளில் கலந்துகொண்டு வருகிறார். 

தற்போது துபாயில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் மாரியப்பன். இதே போட்டியில் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் இந்தியா வீரர் சரத்குமார். இதன்மூலம் இருவரும் வரும் 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவிருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். 


 

NEXT STORY