வாவ்! 28 வருடங்கள் கழித்து இங்கிலாந்து இறுதிச்சுற்றுக்குத் தகுதி, ஆஸியை வீழ்த்தியது!

விளையாட்டு
Updated Jul 11, 2019 | 22:49 IST | Times Now

உலகக்கோப்பையின் அரையிறுதிச் சுற்றில் நடப்புச் சேம்பியனான ஆஸ்திரேலியாவை வென்று இங்கிலாந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ENG beat AUS to enter final after 28 years
ENG beat AUS to enter final after 28 years  |  Photo Credit: AP

Key Highlights

  • இதுவரை ஒரு உலகக்கோப்பையைக் கூட வெல்லாத நியூசியும் இங்கிலாந்தும் இந்த முறை இறுதிச் சுற்றுக்கு சென்றுள்ளன
  • 1992 வருடம் தான் கடைசியாக இங்கிலாந்து ஃபைனலுக்கு சென்றது
  • சென்ற உலகக்கோப்பையில் நியூசி முதல் முறையாக ஃபைனலுக்குச் சென்றது

நேற்று இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்த நிலையில் இன்று இரண்டாவது அரையிறுதி இங்கிலாந்துக்கும் நடப்புச் சேம்பியனான ஆஸ்திரேலியாவுக்கும் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 28 வருடங்கள் கழித்து இறுதிச் சுற்றுக்கு சென்றுள்ளது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டேவிட் வார்னரும் ஆரோன் ஃபிஞ்சும் களமிறங்கினர். ஃபின்ச் ரன்னேதும் எடுக்காமலும் வார்னர் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். நேற்று இந்திய அணி எப்படி ஒவ்வொரு விக்கெட்டாக இழந்ததோ அதேபோன்று ஆஸ்திரேலியாவும் இழந்தது. ஹேண்ட்ஸ்கோம் 4, ஸ்டோனிஸ் 0, குமின்ஸ் 6, ஜேசன் 1, லையோன் 5 என அனைவரும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க ஸ்கோரை சற்றே உயர்த்தியது ஸ்டீவ் ஸ்மித்தும் காரேவும். ஸ்மித் 85 ரன்களும் காரே 46 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கோடுக் களமிறங்கியது இங்கிலாந்து. எங்கே நேற்று இந்திய அணி போல இங்கிலாந்தும் தோற்துவிடுமோ என்று நினைக்கையில் கொஞ்சம் சுதாரித்து ஆடத்துவங்கியது. போலவே நேற்று போல இந்த மைதானம் இல்லாமல் பேட்டிங் சாதகமாக இருந்ததால் துவக்கம் முதலே வெளுத்து வாங்கினர் இங்கிலாந்து வீரர்கள். தொடக்க வீரர் ஜேசன் ராய் 65 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார். பேய்ர்ஸ்டோவ் 34 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மார்கனும் ரூட்டும் 32 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றிபெற்றனர். 2 விக்கெட்டுகளை இழந்து 18 ஓவர்கள் மீதமிருக்கையில் 226 ரன்கள் அடித்தனர். நடப்புச் சேம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் 1992 ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்தும் நியூசிலாந்தும் வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்றில் மோதுகின்றன. 
 

NEXT STORY