நெருங்குது உலகக்கோப்பை கிரிக்கெட்: விராட் கோலி திறமையில் ரவி சாஸ்திரிக்கு சந்தேகமா?

விளையாட்டு
Updated May 15, 2019 | 15:28 IST | Times Now

விராட் கோலியின் திறமை குறித்து தனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.

விராட் கோலி குறித்து ரவிசாஸ்திரி பதில்
விராட் கோலி குறித்து ரவிசாஸ்திரி பதில்  |  Photo Credit: AP

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்திய  அணியின் கேப்டன் விராட் கோலியின் திறமை குறித்து தனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான அணி லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை விராட் கோலியின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு ரவிசாஸ்திரி பதில் அளித்துள்ளார்.

நியூஸ் 18க்கு பேட்டியளித்த அவரிடம், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் 4 வது பேட்ஸ்மேன், அணி வீரர்களின் தற்போதைய ஆட்டத்திறன், ஐபிஎல் போட்டியினால் கேப்டன் விராட் கோலியின் செயல்பாட்டில் பாதிப்பு இருக்குமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. விராட் கோலி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஐபிஎல் போட்டியினால் அவரது செயல்பாட்டில் எந்தவித தாக்கமும் இருக்காது எனத் தெரிவித்தார். 

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை, கிரிக்கெட்டின் மிக முக்கியமான அம்சமாக கருதப்படுபவை. கடந்த 5 ஆண்டுகளை எடுத்துக்கொண்டு பார்த்தால், அனைத்து வகையான போட்டிகளிலும் அவர் எவ்வளவு சிறப்பாக விளையாடி வருகிறார் என்பது தெரியும். எனினும், இன்னும் சில முன்னேற்றத்திற்கு வாய்ப்புகள் உள்ளது. அவருக்கு தற்போது தான் 30வது ஆகிறது. காயம் எதுவும் பாதிப்பு ஏற்படுத்தாவிட்டால், கோலி இன்னும் 7 முதல் 8 ஆண்டுகள் சிறப்பாக விளையாடுவார் என்றும் ரவிசாஸ்திரி தெரிவித்தார். 

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டித் தொடரில் முதல் 6 போட்டிகளில் தொடர் தோல்வியைச் சந்தித்த விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணி, பின்னர் எழுச்சிபெற்ற கடைசி 8 போட்டிகளில் 5 இல் வெற்றிபெற்றது. எனினும், ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை அந்த அணி இழந்தது.
 

NEXT STORY
நெருங்குது உலகக்கோப்பை கிரிக்கெட்: விராட் கோலி திறமையில் ரவி சாஸ்திரிக்கு சந்தேகமா? Description: விராட் கோலியின் திறமை குறித்து தனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles