ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இன்று மோதல்: களமிறங்கும் வீரர்கள் யார் யார்?

விளையாட்டு
Updated Jun 12, 2019 | 11:20 IST | Times Now

உலகக்கோப்பை போட்டித் தொடரை மழை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், 17 வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் போட்டியில் வெல்லப்போவது யார்?
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் போட்டியில் வெல்லப்போவது யார்?  |  Photo Credit: AP

உலகக்கோப்பை போட்டித் தொடரை மழை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், 17 வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. தொடர்ந்து வெற்றிபெற்றுவந்த ஆஸ்திரேலிய அணியை ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தோற்கடித்தது. அதேசமயம், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, இரண்டாவது போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வென்றது. இலங்கை அணியுடனான 3 வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வெற்றியைத் தொடரும் முனைப்பில் பாகிஸ்தான் அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியைப் பொறுத்துவரை ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கும், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 348 ரன்களை விளாசிய பாகிஸ்தான் அணியின் திறமை வாய்ந்த பேட்டிங் வரிசைக்கும் இடையேயான போட்டியாக கருதப்படுகிறது.

மார்கஸ் ஸ்டோனிஸ் இந்தப் போட்டியில் விளையாட மாட்டார் என்பது ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்சுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால், கூடுதல் பந்துவீச்சாளர் ஒருவரை களமிறக்கும் நிலைக்கு பிஞ்ச் தள்ளப்பட்டுள்ளார். இதனால், ஆஸ்திரேலிய அணி ஒரு பேட்ஸ்மேனை குறைவாக களமிறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் பேட்டிங்கை மட்டுமின்றி முகமது அமீர், வஹாப் ரியாஸ் ஆகியோரின் வேகப் பந்துவீச்சையும் ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. முகமது அமீர் இதுவரை 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே வஹாப் ரியாஸ் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
 

NEXT STORY