#INDvNZ: World Cup Live: கொட்டித் தீர்த்த மழை, போட்டி ஒத்திவைப்பு. முதல் நாள் மேட்சில் நடந்தவை என்ன?

விளையாட்டு
Updated Jul 10, 2019 | 14:46 IST | Times Now

தொடர் மழை காரணமாக இன்றைய அரைஇறுதிப் போட்டி நாளை ஒத்திவைக்கப்படுகிறது.

Williamson opts to bat India vs New Zealand Semifinal
Williamson opts to bat India vs New Zealand Semifinal pic: ICC 

45 லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இன்று முதல் அரையிறுதிப் போட்டியில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணியும், நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்தும் மோதுகின்றன. போட்டி நடைபெறும் ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே பெரும்பாலும் வெற்றிபெற்றுள்ளது. இதனால் இங்கு முதலில் பேட்டிங் செய்யப்போகும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

10:55 PM: மழை தொடர்ந்து பெய்து வருவதால், போட்டி இன்று நிறுத்தப்பட்டு நாளை மீண்டும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி நாளை 3:00 மணிக்கு நியூசிலாந்து மீதமிருக்கும் 3.5 ஓவர்களை விளையாடும். அதன்பின் இந்திய அணி 50 ஓவர் விளையாடத் தொடங்கும்.

 

 

10:30 PM: மீண்டும் மழை தொடங்கியுள்ளது. இதனால் இன்ஸ்பெக்‌ஷன் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 

 

10:20 PM: இந்திய நேரப்படி 10:30 மணிக்கு மைதானம் தரம் பார்க்கப்பட்டு எத்தனை ஓவர்கள் இந்திய அணிக்கு நிர்ணயக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படும். 

 

 

10:10 PM: ஒரு வழியாக மழை நின்றுவிட்டது. மைதானத்தைத் தயார் செய்யும் வேலைகள் நடைபெற்றுவருகின்றன.

 

 

9:50 PM: மழை விடும் பட்சத்தில் 20 ஓவர் போட்டிதான் என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது. இருப்பினும் இன்று இனிமேல் போட்டி நடைபெறும் வாய்ப்பு மிகமிகக் குறைவாகவே உள்ளது.

 

 

9:20 PM: மழை நிக்காமல் பெய்து வருவதால், இந்திய அணி ஒவ்வொரு நாலு நிமிடத்துக்கும் ஒரு ஓவரை இழந்து வருகிறது. 

8:50 PM: மழை சற்றுமுன் குறைந்திருந்த நிலைய்ல் தற்போது மீண்டும் பலமாகப் பெய்யத் துவங்கி உள்ளது. 

8:20 PM: மழை குறைந்திருந்த நிலையில் டி.எல்.எஸ் முறைப்படியே 20 ஓவராக மாற்றலாம் என்று அம்பயர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். இருப்பினும் போட்டி துவங்க இந்திய நேரப்படி 10 மணி ஆகும் என்று தெரிகிறது.

8:10 PM: டி.எல்.எஸ் முறைப்படி தற்போது 20 ஓவருக்கு மேட்சைக் குறைத்து இந்திய அணி 148 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற முறையைப் பயன்படுத்தலாம என்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

7:30 PM: ஒரு வேளை மழை தொடர்ந்தால் ரிசர்வ் டே என்று தீர்மானித்தால் மேட்ச் இன்று நிறுத்தப்பட்டு நாளை நியூசிலாந்து விட்ட இடத்தில் இருந்து தொடங்கும். 

7:00 PM: மழை சிறிது நேரத்தில் விட்டுவிடும் என்றால், 46 ஓவரில் இந்திய அணி 237 ரன்கள் அடிக்கவேண்டும் என்று டார்கெட் கொடுக்கப்படும். 

6:32 PM: மழை வந்துள்ளதால் பிட்சில் கவர் போடப்பட்டுள்ளது. வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். இன்னும் மூன்று ஓவர் மீதம் இருக்கையில் 46.1 ஓவரில் 211 ரன்கள் எடுத்திருக்கிறது. 

 

 

6:27 PM: கிராண்ட்ஹோம் வெளியேறிய பிறகு அவருக்கு பதிலாக லேதம் களமிறங்கி ஆடி வருகிறார். 46 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்துள்ளது நியூசி 

6:20 PM: 44.4 வது பந்தில் புவனேஷ்குமார் வீசிய ஸ்லோ பவுன்ஸரை தோனி கேட்ச் பிடித்தார். கிராண்ட்ஹோம் 16 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். 44.3 பந்தில் 200 ரன்களைக் கடந்தது நியூசிலாந்து

6:05 PM: ஹர்திக் பாண்டியா போட்ட பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து நீஷம் அவுட் ஆனார். இவர் 18 பந்தில் 12 ரன்கள் அடித்தார். 

6:00 PM: 40 ஓவர் முடிவில் நியூசிலாந்து 155-3 

5:40 PM: வில்லியம்சன் அவுட் ஆன பிறகு நீஷம் தற்போது களமிறங்கி விளையாடி வருகிறார். 37 ஓவர் முடிவில் 140 ரன்கள் பெற்றிருக்கிறது நியூசி. இதுவரை நியூசிலாந்து வீரர்கள் உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தப் பட்டியலில் கப்டிலை பின்னுக்குத் தள்ளி கேன் வில்லியம்சன் முதலிடம் பிடித்துள்ளார்.

548 கேன் வில்லியம்சன் (2019)
547 கப்டில் (2015)
499 ஸ்டைரிஸ் (2007)
456 க்ரோவ் (1992)
353 ஃப்லெமிங் (2007)

5:35 PM: அவுட்! சாஹல் பந்தில் வில்லியம்சன் விடைபெற்றார். 35.2 பந்தில் சாஹல் வீசிய பந்தில் நியூசியின் கேப்டன் வில்லியம்சன் ஜடேஜாவிடன் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவர் 95 பந்தில் 65 ரன்கள் எடுத்துள்ளார்.

 

 

5:30 PM: 34 ஓவர் முடிவில் நியூசிலாந்து 128 ரன்கள் எடுத்துள்ளது. 

 

 

5:10 PM: 32 ஓவர் முடிவில் 121 ரன்கள் எடுத்திருக்கிறது நியூசிலாந்து. 32வது ஓவரில் பும்ரா ஒரு ரன்னை மட்டுமே கொடுத்திருக்கிறார்.

 

 

5:10 PM: ஒரு வழியாக நியூசிலாந்து 28வது ஓவரில் 100வது ரன்னைத் தாண்டியது. 29 ஓவர் முடிவில் 105 ரன்கள் அடித்துள்ளது. கேன் வில்லியம்சன் 39வது அரைசதத்தை கடந்தார்.

5:00 PM: 27 ஓவர் முடிவில் 89-2 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. தற்போதைய ரன் ரேட் 3.33

 

 

4:50 PM: இந்த ஓவரில் சாஹல் பந்துவீச வில்லியம்சன் ரன் எடுக்க முயற்சித்தபோது கோலி பந்தைப் பிடித்து ஸ்டம்பை பார்த்து அடித்தார். தோனி அதை வாங்கி அடிக்க முயன்றபோது தோனியின் க்ளௌசில் பந்து பட்டு வெளியேறியதால் கேன் வில்லியம்சன் தப்பினார். 

4:50 PM: 25 ஓவர் முடிவில் 83 ரன்கள் எடுத்திருக்கிறது நியூசிலாந்து. 

4:40 PM: 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் எடுத்துள்ளது.

4:35 PM: நியுசிலாந்து தனது இரண்டாவது விக்கெட்டை இழந்தது. ஜடேஜா வீசிய பந்தில் நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் நிக்கோலஸ் ஸ்டம்ப் அவுட் ஆகி விடைபெற்றார்.அவர் அவுட் ஆகும் போது நியூசியின் ஸ்கோர் 69-2

 

 

4:30 PM: மைதானத்தில் மழை மேகங்கள் சூழ்ந்துள்ளது. ஆனால் விளையாட்டை நிறுத்தும் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என ஏற்கனவே குறியிருக்கிறார்கள். 18 ஓவர் முடிவில் 69 ரன்கள் அடித்துள்ளது நியூசிலாந்து

 

4:15 PM: வில்லியம்சன் 26, நிக்கோலஸ் 23 ரன்கள் எடுத்து, 14 ஓவர் முடிவில் 52 ரன்கள் எடுத்திருக்கிறது நியூசி.

4:10 PM: நியூசிலாந்தின் தற்போதைய ரன் ரேட் 3.47, இந்த ரன்ரேட்டை வைத்துப் பார்த்தால் 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 285 எடுக்கும். 

4:05 PM : 13 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு நியூசி 44 ரன்கள் எடுத்திருக்கிறது

 

 

உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்:

547 கப்டில் (2015)
501 கேன் வில்லியம்சன் (2019) *
499 ஸ்டைரிஸ் (2007)
456 க்ரோவ் (1992)
353 ஃப்லெமிங் (2007)

3:50 PM : 11வது ஓவரை ஜடேஜா வீசினார். ஓவர் முடிவில் நியூசிலாந்து 34 ரன்கள் எடுத்திருக்கிறது. 12வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசி வருகிறார். 

3:40 PM: எட்டாவது ஓவரில் தனது முதல் பவுண்டரியை அடித்தார் கேப்டன் வில்லியம்சன். 9 ஓவர் முடிவில் நியூசிலாந்து 23 ரன்கள் அடித்துள்ளது

 

 

3.30 PM: ஆறு ஓவர் முடிவில் நியூசிலாந்து எட்டு ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. தற்போது ஏழாவது ஓவரில் புவனேஷ்வர் குமார் தற்போது பந்து வீசி வருகிறார்.

3.30 PM: கப்டில் அவுட் ஆன பிறகு தற்போது நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸ் விளையாடி வருகிறார். அவருடன் தொடக்க ஆட்டக்காரர் நிக்கோலஸ் இணைந்து ஆடி வருகிறார். 

3.20 PM: நியுசிலாந்து தனது முதல் விக்கெட்டை இழந்தது. பும்ரா வீசிய பந்தில் நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் கப்டில் கோலியிடம் கேட்ச் கொடுத்து விடைபெற்றார். 14 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார் கப்டில்

 

உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் 8 முறை மோதியுள்ளன. இதில் 4 முறை நியூசிலாந்து அணி வென்றுள்ளது. இந்தியா 3 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பையின் தொடக்கத்தில் சிறப்பாக ஆடி தொடர்ந்து 5 வெற்றிகளை பெற்றது. கடைசியில் 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளது. இந்திய அணி 9 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் தோல்வி அடைந்தது.

சாதனைகளை நோக்கி: 

இதுவரை உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை சச்சின் வைத்துள்ளார். இதுவரை 673 ரன்கள் அடித்ததை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. தற்போது இந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மா 647 ரன்கள் அடித்துள்ளார். சச்சினிம் சாதனையை முறியடிக்க இன்னும் அவருக்கு 27 ரன்கள் மட்டுமே தேவை. அப்படி அவர் எடுத்துவிட்டால் 16 ஆண்டுகால சாதனையை முறியடித்துவிடுவார். அவரைப் போலவே தோனிக்கும் ஒரு உலக சாதனை பார்சல் செய்யப்படும். ஆம், இன்று நடைபெறும் போட்டி அவருக்கு 350 வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய ஒரே இந்திய வீரர் என்ற சாதனையையும் சச்சின் டெண்டுல்கர் தான் தன்வசம் வைத்திருக்கிறார். இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலம் தோனி 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் பெறுகிறார். 
 

NEXT STORY
#INDvNZ: World Cup Live: கொட்டித் தீர்த்த மழை, போட்டி ஒத்திவைப்பு. முதல் நாள் மேட்சில் நடந்தவை என்ன? Description: தொடர் மழை காரணமாக இன்றைய அரைஇறுதிப் போட்டி நாளை ஒத்திவைக்கப்படுகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola