உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்தியா, நியூசிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு?

விளையாட்டு
Updated Jun 13, 2019 | 12:33 IST | Times Now

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றை 18 வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ள நிலையில், போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா, நியூசிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு?
இந்தியா, நியூசிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு?  |  Photo Credit: AP

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றை 18 வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. ரசிகர்கள் இப்போட்டியை மிகவும் எதிர்பார்த்துள்ள நிலையில், போட்டி நடைபெறும் நாட்டிங்ஹாமில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நியூசிலாந்து அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும்,  இந்திய அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதால், போட்டி நடைபெற்றால் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெற்றுவரும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது.  கடைசி 7 போட்டிகளில் 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு, நாட்டிங்ஹாமில் உள்ள டிரன்ட் பிரிட்ஜில் இன்று நடைபெற உள்ள இந்தியா, நியூசிலாந்து இடையேயான போட்டியை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். எனினும், நாட்டிங்ஹால் நிலவும் வானிலை, கிரிக்கெட் போட்டி நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் இல்லாததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடையும் சூழல் உருவாகியுள்ளது. 

மழையால் மூன்று போட்டிகள் கைவிடப்பட்டுள்ள நிலையில், லீக் ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டால், மற்றொரு நாளில் நடத்த வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். வானிலை அறிவிப்பின்படி, நாட்டிங்ஹாமில் இன்று மிதமானது முதல் கனமழை வரை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா- நியூசிலாந்து இடையேயான இன்றை போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை கடந்த போட்டியில் களமிறங்கிய வீரர்களே இப்போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ள ஷிகர் தவானுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விளையாடுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன், கே.எல்.ராகுல் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இதுவரை:

மோதிய ஆட்டங்கள: 106

இந்தியா வெற்றி: 55

நியூசிலாந்து வெற்றி: 45

சமனில் முடிந்தவை: 1

முடிவு இல்லாதவை: 5
 

NEXT STORY
உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்தியா, நியூசிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு? Description: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றை 18 வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ள நிலையில், போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles