உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: பதக்கத்தை உறுதி செய்து அரையிறுதிக்குச் சென்றார் மேரி கோம்

விளையாட்டு
Updated Oct 10, 2019 | 13:29 IST | Times Now

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மேரி கோம், 51 கிலோ எடை பிரிவில் முதல் முறையாக பதக்கம் வெல்ல இருக்கிறார்.

Mary Kom, மேரி கோம்
மேரி கோம்  |  Photo Credit: IANS

ரஷ்யா: பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் பதக்கம் வெல்வது உறுதியாகியுள்ளது. காலிறுதியில் கொலம்பியா வீராங்கனை வெலன்சியா விக்டோரியாவை 5-0 என வீழ்த்தியதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் மேரி கோம்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் தமது 8-வது பதக்கத்தை வெல்ல தயாராக இருக்கிறார் மேரி கோம். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இதுவரை 6 தங்கம், 1 வெள்ளி என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளார் மேரி கோம்.

மேரி கோம் அரையிறுதியில் துருக்கி நாட்டு வீராங்கனையை எதிர்கொள்கிறார். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மேரி கோம், 51 கிலோ எடை பிரிவில் முதல் முறையாக பதக்கம் வெல்ல இருக்கிறார். 2012 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம், 5 முறை ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம், ஆசிய விளையாட்டுகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கங்கள் ஆகியவற்றை வாங்கிக் குவித்துள்ளார் மேரி கோம்.

இந்த ஆண்டில் குவஹாத்தியில் நடைபெற்ற இந்தியன் ஓபன் மற்றும் இந்தோநேசியாவில் நடைபெற்ற அதிபர் கோப்பை போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற மேரி கோம், நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY