முதல் வெற்றியை பதிவு செய்யுமா தென் ஆப்ரிக்க அணி? மேற்கிந்திய தீவுகளுடன் இன்று மோதல்!

விளையாட்டு
Updated Jun 10, 2019 | 13:09 IST | Times Now

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் முதல் வெற்றியைப் பெற போராடி வரும் தென் ஆப்ரிக்க அணி, ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.

முதல் வெற்றியை பதிவு செய்யுமா தென் ஆப்ரிக்க அணி?
முதல் வெற்றியை பதிவு செய்யுமா தென் ஆப்ரிக்க அணி?   |  Photo Credit: AP

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் முதல் வெற்றியைப் பெற போராடி வரும் தென் ஆப்ரிக்க அணி, ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 3 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாத நிலையில் உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து, இரண்டாவது போட்டியில் வங்கதேசம் மற்றும் மூன்றாவது போட்டியில் இந்தியாவிடம், தென் ஆப்ரிக்க அணி தோல்வியைத் தழுவியுள்ளது.

அதேசமயம், மேற்கிந்திய தீவுகள் அணிகள் அணி இந்த உலகக்கோப்பை போட்டியில் சிறப்பான வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓசேனே தாமஸ், ஷெல்டன் கோட்ரேல், அண்ட்ரூ ரசல், கேப்டன் ஜேசன் ஹோல்டர் அந்த ஒரு அணியையும் திணறடிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

பேட்டிங்கை பொறுத்தவரை, அந்த அணி சற்று சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனெனில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இலக்கை அடைய முடியாமல் தோல்வியைத் தழுவியுள்ளது.

எனினும், காயம் காரணமாக தென் ஆப்ரிக்க அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் டேரல் ஸ்டைய்ன் விலகியுள்ள நிலையில், கிறிஸ் கெய்ல் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்கள் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களை எளிதாக எதிர்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 

NEXT STORY
முதல் வெற்றியை பதிவு செய்யுமா தென் ஆப்ரிக்க அணி? மேற்கிந்திய தீவுகளுடன் இன்று மோதல்! Description: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் முதல் வெற்றியைப் பெற போராடி வரும் தென் ஆப்ரிக்க அணி, ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles