2028 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இடம்பெறுகிறதா கிரிக்கெட்?

விளையாட்டு
Updated Aug 13, 2019 | 11:15 IST | Times Now

2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Cricket in Olympics 2028?
ஒலிம்பிக்ஸ் 2028-இல் கிரிக்கெட்?  |  Photo Credit: Twitter

2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக எம்.சி.சி உலக கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மைக் கேட்டிங் தெரிவித்துள்ளார்.

1900-ஆம் நடைபெற்ற சம்மர் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் இடம்பெற்றது. கேரட் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் மட்டுமே போட்டியிட்ட நிலையில், கிரேட் பிரிட்டன் வெற்றி பெற்று தங்க பதக்கம் பெற்றது. ஆனால் இதுவரை அதுவே கிரிக்கெட் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இடம்பெற்ற முதலும் கடைசி தருணமாகும். அதன் பிறகு இதுவரை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறவில்லை. இந்நிலையில் 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது.

அண்மையில் பி.சி.சி.ஐ வாரியம் தேசிய ஊக்கமருந்து தடை அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வந்தது. ஓர் விளையாட்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் சேர்க்க அந்த விளையாட்டு தொடர்பான அமைப்புகள் உலக ஊக்கமருந்து தடை அமைப்பின் விதிகளுக்குள் வரவேண்டும். எனவே பி.சி.சி.ஐ அதற்கு கட்டுப்பட்டு வந்துள்ள பட்சத்தில் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் இடம்பெற வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை பற்றி எம்.சி.சி உலக கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மைக் கேட்டிங் கூறுகையில்,"நாங்கள் கிரிக்கெட்டை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் சேர்க்கும்படி ஐ.சி.சி-யிடம் கேட்டுள்ளோம். இதற்கு ஐ.சி.சி புதிய செயல் அதிகாரி மனு சாஹனி இந்த விஷயத்தில் நல்ல முன்னற்றேம் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 2028 ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது" என்று அவர் கூறினார்.     

உலகெங்கும் பல நாடுகளில் முன்னணி விளையாட்டாக இருக்கும் கிரிக்கெட் ஒலிம்பிக்ஸில் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியானவுடன் கிரிக்கெட் ரசிகர்கள் இதனை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.                
     

NEXT STORY
2028 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இடம்பெறுகிறதா கிரிக்கெட்? Description: 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...