முகமது ஷமிக்கு கைது பிடிவாரண்ட் .. மனைவி தொடர்ந்த வழக்கில் மேற்கு வங்க நீதிமன்றம் அதிரடி

விளையாட்டு
Updated Sep 03, 2019 | 12:15 IST | Times Now

முன்னாள் மனைவி ஹசீன் ஜஹான் தாக்கல் செய்த வழக்கில், முகமது ஷமி நீதிமன்றம் முன்பு ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்டுள்ளது.

Mohammed Shami, முகமது ஷமி
முகமது ஷமி  |  Photo Credit: IANS

அலிப்பூர்: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் ஹசீத் அகமது ஆகியோருக்கு எதிராக கைது பிடிவாரண்ட் பிறப்பித்து மேற்கு வங்க மாநிலத்தின் அலிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இருவரும் 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் அல்லது ஜாமீன் மனு தாக்கல் செய்யவேண்டும்.

முகமது ஷமி தன்னை துன்புறுத்தியதாக முன்னாள் மனைவி ஹசீன் ஜஹான் தாக்கல் செய்த வழக்கில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498A-வின் கீழ் முகமது ஷமி மற்றும் ஹசீன் அகமது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக முகமது ஷமியின் அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த விவகாரத்தில் தலையிட்டு முகமது ஷமிக்கு விசா பெற்றுத்தந்தது. இந்நிலையில், முகமது ஷமி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தற்போது அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்டுள்ளது.

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முகமது ஷமியின் வழக்கறிஞருடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசிக்க உள்ளது. இது குறித்து, மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “நிலைமையை நாங்கள் அறிவோம். முதலில் செவ்வாய்க்கிழமை அன்று ஷமியின் வழக்கறிஞருடன் பேசுவோம். (நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியின்) நான்காவது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு ஷமியிடம் பிசிசிஐ அதிகாரிகள் பேசினர். எது நடந்தாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கவேண்டும்,” என்றார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி பங்கேற்பாறா என்பது குறித்து தேர்வுக்குழு பின்னர் முடிவு செய்யும். முகமது ஷமி மீது வன்முறை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் சூதாட்ட புகார்களை முன்னாள் மனைவி ஹசீன் ஜஹான் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...