காயங்களோடு தாங்கித்தாங்கி நடந்து சென்ற வாட்சன் - வீடியோ

விளையாட்டு
Updated May 14, 2019 | 09:11 IST | Times Now

சென்னை அணி ஒரு ரன்னில் தோற்றிருந்தாலும், காயம் பட்டதைக் கூறாமல் விளையாடி பலகோடி இதயங்களை வென்றிருக்கிறார் வாட்சன்!

watson injured
watson injured  |  Photo Credit: Twitter

ஐபிஎல் 2019ம் ஆண்டு லீக் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்து மும்பை இண்டியன்ஸ் நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கிய  வாட்சன் 80 ரன்கள் அடித்து கடைசி வரைப் போராடி கடைசி இரண்டு பந்துகள் இருக்கையில் அவுட் ஆனார். அவர் முழங்காலில் காயத்துடன் விளையாடினார் என்று ஹர்பஜன் நேற்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் காயத்துடன் விமானநிலையத்தில் தாங்கிதாங்கி செல்லும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

போட்டி முடிந்ததும் நேற்று அனைத்து வீரர்களும் தங்களது ஊர்களுக்குப் பிரியாவிடை கொடுத்துக் கிளம்பினர். அப்போது ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் வாட்சனின் முழங்காலில் ரத்தக்கறை படிந்திருக்க்கிறது. போட்டி முடிந்து அவருக்கு ஆறு தையல்கள் போடப்பட்டதாகத் தெரிவித்திருக்கும் ஹர்பஜன் சிங், வாட்சன் காயத்தை யாரிடமும் சொல்லாமல் விளையாடியதாக சிலாகித்திருக்கிறார். மேலும் இதுதான் எங்கள் வாட்சன், அவர் நமக்காக விளையாண்டிருக்கிறார் என உணர்ச்சிபொங்கக் கூறியிருந்தார். அதன்பிறகுதான் ரசிகர்களுக்கும் அவர் காயத்தோடு விளையாடியது தெரியவந்தது. 

 

வாட்சன் காயம்

சென்னை அணி தோல்வி அடைந்ததை விட இந்தச் சோகம்தான் எங்களை இன்னும் கவலைக் கொள்ளச் செய்கிறது என்று உருகத்தொடங்கி விட்டனர், சென்னை ரசிகர்கள். சென்ற வருட ஐபிஎல் இறுதிப்போட்டியிலும் வாட்சன் 117 ரன்கள் அடித்து கோப்பையைப் பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும். ஆனால் காயம் காரணமாக ஓட முடியாமல் ரன் அவுட் ஆனது தற்போதுதான் தெரியவந்துள்ளது. 

 

 

இந்நிலையில் நேற்று போட்டி முடிந்து ஊருக்குக் கிளம்பிய வாட்சன் விமான நிலையத்தில் நடக்கமுடியாமல் தாங்கித்தாங்கி நடக்கும் வீடியோவும் வைரல் ஆகிவருகிறது. அவர் 2016-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், உள்ளூர் போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் இன்றும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிகாட்டத்த தவறவில்லை. சென்னை அணி ஒரு ரன்னில் தோற்றிருந்தாலும் பலகோடி இதயங்களை வென்றிருக்கிறார் வாட்சன்!

NEXT STORY
காயங்களோடு தாங்கித்தாங்கி நடந்து சென்ற வாட்சன் - வீடியோ Description: சென்னை அணி ஒரு ரன்னில் தோற்றிருந்தாலும், காயம் பட்டதைக் கூறாமல் விளையாடி பலகோடி இதயங்களை வென்றிருக்கிறார் வாட்சன்!
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles