பங்களாதேஷ் அணிக்கு பேட்டிங் ஆலோசகரானார் வாசிம் ஜாஃபர்

விளையாட்டு
Updated Jul 16, 2019 | 19:23 IST | Times Now

பங்களாதேஷ் அணிக்கு பேட்டிங் ஆலோசகராக இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Wasim Jaffer
வாசிம் ஜாஃபர்   |  Photo Credit: PTI

உலகக்கோப்பையை தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்களாதேஷ் அணி பங்கேற்கவுள்ள உள்ளது. அந்த அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றிலே வெளியேறியது. இதனை தொடந்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் பதவி விலகினார். அவரின் பதவி காலம் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பை தொடர் வரை இருந்த நிலையில், பங்களாதேஷ் அணியின் உலகக்கோப்பை ஆட்டத்தால் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது. எனவே பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது .  

இந்நிலையில் இந்த மாதம் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்களாதேஷ் அணியின் பேட்டிங் ஆலோசகராக வாசிம் ஜாஃபர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இலங்கை தொடரில் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்சியாளர் பற்றிய விவரத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் விரைவில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.      

இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும் 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய வாசிம் ஜாஃபர் ரஞ்சி ட்ராஃபி தொடர்களில் அதிக ரன்களை அடித்த வீரர் ஆவர். இவர் கடந்த மே மாதம் பங்களாதேஷின்  கிரிக்கெட் பயிற்சி அகடாமியில் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது இவர் பங்களாதேஷ் அணிக்கு பேட்டிங் ஆலோசகராகவும் பணியாற்றவுள்ளார். இறுதியாக 2008-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய வாசிம் ஜாஃபர் பங்களாதேஷ் கிரிக்கெட் லீகிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.     

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...