கார்களைக் கழுவ ஆயிரம் லிட்டர் குடிநீர் - கோலிக்கு ரூ500 அபராதம்!

விளையாட்டு
Updated Jun 08, 2019 | 15:11 IST | Times Now

தமிழ்நாடு மட்டுமின்றி  இந்தியாவில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு குருகிராமும் தப்பிக்கவில்லை.  

virat kohli
விராட் கோலி வீடு  |  Photo Credit: YouTube

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்தில் தற்போது உலக கோப்பை தொடரில் ஆடிவருகிறார். எப்படியும் இந்த ஆண்டு கோப்பையை வென்று விடும் முனைப்பில் இந்திய அணி விளையாடி கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் விராட் கோலிக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

 ஏ.பி.பி கட்டுரையின்படி  ஹரியானா, குருகிராமில் உள்ள கோலியின் அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குருகிராம் வீட்டில் 2 எஸ்.யூ.வி உட்பட கோலியின் ஆறு கார்களை ஆயிரம் லிட்டருக்கு குடிதண்ணீரிருக்கும் மேலாகாப் பயன்படுத்தி அவரது வேலைக்காரர்கள் கார்களைக் தழுவியதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு மட்டுமின்றி  இந்தியாவில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு குருகிராமும் தப்பிக்கவில்லை.  கோலியின் வீடு போலவே இங்கே 10 வீடுகளுக்கு இதேபோன்று அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மற்றவர்கள் குடிதண்ணீரை வீணாக்க மாட்டார்கள் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கார்ப்பரேஷன் கமிஷ்னர் தெரிவித்திருக்கிறார்.  இந்நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுடன் மோதவிருக்கிறது.


 

NEXT STORY
கார்களைக் கழுவ ஆயிரம் லிட்டர் குடிநீர் - கோலிக்கு ரூ500 அபராதம்! Description: தமிழ்நாடு மட்டுமின்றி  இந்தியாவில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு குருகிராமும் தப்பிக்கவில்லை.  
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles