மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!

விளையாட்டு
Updated Sep 18, 2019 | 15:03 IST | Times Now

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் அமெரிக்காவின் சாராவை 8-2 என வீழ்த்தி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதியடைந்துள்ளார் வினேஷ் போகாட்.

Vinesh Phogat, வினேஷ் போகாட்
வினேஷ் போகாட்  |  Photo Credit: Twitter

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் 2020 டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியடைந்துள்ளார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் அமெரிக்காவின் சாராவை 8-2 என வீழ்த்தி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதியடைந்துள்ளார் வினேஷ் போகாட். கிரேக்க நாட்டின் மரியாவுடன் 53 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்காக வினேஷ் போகாட் போட்டியிட இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் பத்மஸ்ரீ விருதுக்காக வினேஷ் போகாட் பரிந்துரைக்கப்பட்டார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ள வினேஷ் போகாட் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை பதக்கம் எதுவும் வென்றது கிடையாது. 

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் ஜப்பானின் மயு முகைடாவிடம் 0-7 என தோல்வியை தழுவினார். வினேஷ் போகாட்டை வென்றதன் மூலம் மயு முகைடா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் சீமா பிஸ்லா, சரிதா மோர் மற்றும் கிரண் பிஷ்னோய் ஆகிய பிற இந்திய வீரர்கள் பதக்கம் வெல்லும் வாய்ப்புகளை தவிற விட்ட நிலையில், வெண்கலப் பதக்கம் வெல்ல தற்போது வினேஷ் போகாட்டிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

NEXT STORY