தல... தல... லண்டனில் தோனிக்கு பாகுபலி மொமண்ட்! ஃபீல்டிங் செய்த சுவாரஸ்யம் - வீடியோ

விளையாட்டு
Updated May 26, 2019 | 11:51 IST | விபீஷிகா

தினேஷ் கார்த்திக் சுலபமான ஒரு கேட்சை மிஸ் செய்தவுடன் வர்ணனையாளர்கள் இந்த இடத்தில் தோனி இருந்திருக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டாமல் இல்லை.  இதெல்லாம் ஜஸ்ட் தோனி திங்ஸ் தானே!

MS Dhoni spotted fielding
MS Dhoni spotted fielding  |  Photo Credit: Twitter

நேற்று லண்டனில் நடைபெற்ற உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதன்முறையாக இந்திய அணி விளையாடியது. மேடில் தோற்றாலும் நேற்றைய ஹைலைட் ட்தோனிதான்! வழக்கம் போல...

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்திருந்தது. நியூசிலாந்து பவுலர்களின் அபார ஆட்டத்தால்  பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழத்தொடங்கியது. ரோகித் சர்மா, தவான், ராகுல், கோலி என அடுத்தடுதது அவுட்டாக தோனி களமிறங்கினார். கேபினில் இருந்து வெளிவரும் போது சேப்பாக்கம் அரங்கத்தில் ஆர்ப்பரிக்கும் சிஎஸ்கே ரசிகர்களைப் போல, லண்டன் மைதானத்தில் தோனி தோனி என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள். 

பின் ஃபீல்டிங் செய்ய வந்த இந்திய அணி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தது. தோனி நேற்றைய போட்டியில் இருந்தாலும் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் செய்ய வந்தார். என்னடா இது தோனி எங்கே என்று பார்த்தால் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்ய கிளம்பிவிட்டார்.  இது பயிற்சி ஆட்டம் என்பதால் தினேஷ் கார்த்திக் லண்டன் மைதானம் பழகுவதற்காக விக்கெட் கீப்பிங் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை அணியில் தேர்வானதும் தோனி இல்லை என்றால் மட்டுமே என்னால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியும் என்று கூறியிருந்தார். அதனால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்ட இருக்கலாம். மேலும் ஐபிஎல் தொடரில் கடைசி சில ஆட்டங்களில் தோனிக்கு முதுகில் அடிபட்டு இருந்ததால் சரியாக விளையாடாமல் போனதாலும் கடைசி இரண்டு போட்டியில் காயத்துடனே விளையாடினார். 

 பயிற்சி ஆட்டங்களில் அவர் ஆடி மீண்டும் காயம் அதிகமானால் பிரச்சினை என்று கேப்டன் கோலி நினைத்து இருக்கலாம், அதனால் என்றுமில்லாமல் விக்கெட் கீப்பிங் க்ளௌஸை அணியாமல் கூலாக பவுண்டரி லைனில் நின்றிருந்தார் தோனி. அங்கேயும் நம்ம ரசிகர்கள் விட்டுவைக்கவில்லை. ’’தல தல’’ என்று பவுண்டரி லைனில் இருக்கும் தோனியை கத்தி உற்சாகப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று வர்ணனை செய்த ஹர்பஜன் சிங்கும் தோனி போல ஒரு கேப்டனை நான் பார்த்ததே இல்லை என்று அவரை புகழ்ந்தார். தினேஷ் கார்த்திக் சுலபமான ஒரு கேட்சை மிஸ் செய்தவுடன் வர்ணனையாளர்கள் இந்த இடத்தில் தோனி இருந்திருக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டாமல் இல்லை.  இதெல்லாம் ஜஸ்ட் தோனி திங்ஸ் தானே!

 நேற்றைய மேட்ச் ரிப்போர்ட் பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.  இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் மோதவிருக்கும் அணி, இடம், தேதியைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள். 

NEXT STORY
தல... தல... லண்டனில் தோனிக்கு பாகுபலி மொமண்ட்! ஃபீல்டிங் செய்த சுவாரஸ்யம் - வீடியோ Description: தினேஷ் கார்த்திக் சுலபமான ஒரு கேட்சை மிஸ் செய்தவுடன் வர்ணனையாளர்கள் இந்த இடத்தில் தோனி இருந்திருக்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டாமல் இல்லை.  இதெல்லாம் ஜஸ்ட் தோனி திங்ஸ் தானே!
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola