ஆசிய தடகளப்போட்டிகள்: இந்தியா இரண்டு நாளில் 10 பதக்கங்கள் குவிப்பு, முதல் தங்கத்தை வென்றார் கோமதி மாரிமுத்து!

விளையாட்டு
Updated Apr 23, 2019 | 11:39 IST | Times Now

இந்தியாவின் முதல் தங்கத்தை திருச்சியை சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து வென்று சாதனைப் படைத்தார். 

கோமதி மாரிமுத்து
கோமதி மாரிமுத்து   |  Photo Credit: AP

ஆசிய தடகளப் போட்டியில் திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். 

கத்தார், தோகாவில் 23-வது ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமைத் தொடங்கிய  போட்டிகளில் திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். 

திங்கட்கிழமை நடந்த மகளிர் 800 மீட்டர் ஓட்டத்துக்கான பிரிவில் 30 வயதான கோமதி மாரிமுத்து 2 நிமிடன் 02.70 வினாடியில் கடந்து தங்கப்படதக்கத்தை வென்றார். தற்போது பெங்களூருவில் வருமான வரித்துறையில் பணிபுரிந்து வரும் கோமதி ஏற்கனவே சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான திஜேந்தர்பால் தூர் ஷாட்புட் பிரிவில் தங்கம் வென்றார்.  

கோமதி மாரிமுத்து தங்கம் வாங்குவதற்கு முன்னேயே மகளிர் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம், ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபில்ட்சேஸ் பிரிவில் வெள்ளி, மகளின் 400 மீட்டர் ஓட்டம், மகளிர் 5000 மீட்டம் ஓட்டம், ஆண்கள் 10000 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் வெண்கலம் என மொத்தம் ஐந்து பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாள் முடிவில் இந்தியா இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, ஐந்து வெண்கலம் என பத்துப் பதக்கங்கள் வென்று பாயிண்ட்ஸ் டேபிளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

NEXT STORY
ஆசிய தடகளப்போட்டிகள்: இந்தியா இரண்டு நாளில் 10 பதக்கங்கள் குவிப்பு, முதல் தங்கத்தை வென்றார் கோமதி மாரிமுத்து! Description: இந்தியாவின் முதல் தங்கத்தை திருச்சியை சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து வென்று சாதனைப் படைத்தார். 
Loading...
Loading...
Loading...