இங்கிலாந்தை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் இந்திய அணி! என்ன காரணம்?

விளையாட்டு
Updated Jul 12, 2019 | 16:47 IST | Times Now

இங்கிலாந்தில் இருந்து இந்தியா வர விமான டிக்கெட் கிடைக்காததால் உலகக்கோப்பை தொடர் முடியும் வரை இந்திய அணியினர்

Ticketless Team India stranded in England till WC Final
டிக்கெட்டி இன்றி இங்கிலாந்தில் இந்தியா அணி  |  Photo Credit: AP

இங்கிலாந்து: உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணி நாடு திரும்ப முடியாமல் இங்கிலாந்திலேயே தவித்து வருகிறது.  

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்களில் அசத்தி வந்த இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் 4-வது இடம் பிடித்த நியூசிலாந்துடன் ஜூலை 9-ம் தேதி மோதியது. ஆட்டம் நமக்கு சாதகமாக இருந்த நிலையில் மழை குறுக்கீட்டால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டு மறுநாள் மீண்டும் நடந்தது. அதில் எதிர்பாரதவிதமாக இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியது.

இதையடுத்து இந்திய அணியினர் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்தனர். ஆனால், அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதாவது, இந்திய வீரர்கள் நாடு திரும்புவதற்கான டிக்கெட்டுகளை பிசிசிஐ நிர்வாகிகள் முன்பதிவு செய்யவில்லை. கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காததால் அங்கேயே இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து வீரர்கள தாங்கள் தங்கியுள்ள ஹோட்டலிலே மீண்டும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ஜூலை 14-தேதி லார்ட்ஸில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் இடையே இறுதிப்போட்டி நடைபெறும் நிலையில், அதுவரை இந்திய அணி மான்செஸ்டர் நகரில் தான் இருக்கும் என்று தெரிகிறது.

உலகக்கோப்பையை தொடர்ந்து இந்திய அணி ஆகஸ்ட் 3 -ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ்  அணிக்கு எதிரான தொடரில் பங்குபெறுகிறது. விராட் கோலி மற்றும் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறுவார் என்ற செய்தியும் உலா வருவதால், அவர் இந்த தொடரில் பங்குபெறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

NEXT STORY
இங்கிலாந்தை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் இந்திய அணி! என்ன காரணம்? Description: இங்கிலாந்தில் இருந்து இந்தியா வர விமான டிக்கெட் கிடைக்காததால் உலகக்கோப்பை தொடர் முடியும் வரை இந்திய அணியினர்
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola