CSKvsDC: 2012 குவாலிஃபயர் 2-இல் டெல்லியை வென்றது சென்னை, வரலாறு திரும்புமா?

விளையாட்டு
Updated May 10, 2019 | 13:10 IST | விபீஷிகா

2012-ஆம் ஆண்டு இதே நிலையை சென்னையும் டெல்லியும் எதிர்கொண்டது. அப்போது டெல்லி அணியில் டேவிட் வார்னர், ஷேவாக், ரஸல் ஆகியோர் இருந்தனர்.

CSKvsDC Qualifier 2
CSKvsDC Qualifier 2  |  Photo Credit: Twitter

இன்னும் ஒரே மேட்ச் தான், ஐபிஎல் போட்டி மறந்து உலக்கோப்பையைக் கையில் எடுத்து விடுவார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். இறுதிச்சுற்றுக்குச் செல்லும் குவாலிஃபயர் 2 சுற்று இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்கிஸும் ஆறுவருடங்களுக்குப் பிறகு ப்ளே-ஆஃப் சுற்றுக்கு வந்திருக்கும் டெல்லி அணியும் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் மும்பையை எதிர்கொள்ளும்.

2012-ஆம் ஆண்டு இதே நிலையை சென்னையும் டெல்லியும் எதிர்கொண்டது. அப்போது டெல்லி அணியில் டேவிட் வார்னர், ஷேவாக், ரஸல் ஆகியோர் இருந்தனர். எலிமினேட்டர் சுற்றில் மும்பையை வென்ற சென்னையும், குவாலிஃபயர் 1-இல் கொல்கத்தாவிடம் தோற்ற டெல்லியும் குவாலிஃபையர் 2-இல் மோதின. முதலில் பேட்டிங் பிடித்த சென்னை அபாரமாக ஆடி 222 ரன்கள் அடித்து நொறுக்கியது. 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய டெல்லி அணியில் முதல் நான்கு ஓவரிலேயே வார்னரும், ஷேவாகும் அவுட்டாக மேட்ச் சென்னைப் பக்கம் சாய்ந்தது. டெல்லியால் 136 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் சென்னை 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு சென்றது. இறுதிச்சுற்றில் கொல்த்தா வென்று 2012-சாம்பியன் ஆனது தனிக்கதை, என்றாலும் 2012-இல் குவாலிஃபயர் 2 சுற்றில் சென்னை அபாரமாக வெற்றி பெற்றதுதான் விஷயம்.

இன்று டெல்லியில் ஷேவாக் இல்லை, வார்னர் இல்லை, ரஸல் இல்லை... ஆனால் ரிஷப் பண்ட் இருக்கிறார். கோச்சாக ரிக்கி பாண்டிங் இருக்கிறார், மென்டராக தாதா கங்குலி இருக்கிறார். 2012-க்குப் பிறகு ஆறு வருடங்கள் கழித்து ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதே டெல்லி அணி எவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்கிறது என்பதைச் சொல்லிவிடும். இருப்பினும், சென்னை அணியில் தோனி இருக்கிறார். என்ன நடந்தாலும் சமாளித்துவிடுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கிறது. டெல்லியைப் பொருத்தவரை அந்தமாதிரி நம்பிக்கையுடன் கூற முடியாது. ஒரு போட்டியில் சிறப்பாக பௌலிங் வீசுகிறார்கள். ஒரு போட்டியில் சிறப்பான பேட்டிங், ஒரு போட்டியில் இரண்டுமே சொதப்பல் என ஒரு ஃபார்மில் இல்லாததால் இன்று என்ன நடக்கும் யார் ஜெயிப்பார்கள் என கணிப்பதே சிரமம்தான். இருப்பினும் இறுதிச்சுற்றுக்கு செல்லும் கடைசி போட்டி என்பதால் ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். பார்ப்போம் இறுதிப்போட்டிக்குச் செல்வது அங்கிள்ஸ் டீமா, யங்கர்ஸ் டீமா என்று! 


 

NEXT STORY
CSKvsDC: 2012 குவாலிஃபயர் 2-இல் டெல்லியை வென்றது சென்னை, வரலாறு திரும்புமா? Description: 2012-ஆம் ஆண்டு இதே நிலையை சென்னையும் டெல்லியும் எதிர்கொண்டது. அப்போது டெல்லி அணியில் டேவிட் வார்னர், ஷேவாக், ரஸல் ஆகியோர் இருந்தனர்.
Loading...
Loading...
Loading...