சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல்: 129 வது இடத்துக்கு முன்னேறினார் சுமித் நாகல்!

விளையாட்டு
Updated Oct 07, 2019 | 11:39 IST | Times Now

இந்தியாவின் இளம் டென்னிஸ் நட்சத்திரமான சுமித் நாகல், ஏடிபி தரவரிசை பட்டியலில் 129 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தரவரிசையில்129 வது இடத்துக்கு சுமித் நாகல் முன்னேற்றம்
தரவரிசையில்129 வது இடத்துக்கு சுமித் நாகல் முன்னேற்றம்  |  Photo Credit: IANS

புதுடெல்லி: இந்தியாவின் இளம் டென்னிஸ் நட்சத்திரமான சுமித் நாகல், ஏடிபி தரவரிசை பட்டியலில் 129 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறிய சுமித் நாகல், தரவரிசையில் 6 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். பிரேசிலில் கடந்தவாரம் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்ட சுமித் நாகல், அரையிறுதிப் போட்டியில், தரவரசையில் 325 வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினாவின் ஜூவான் பிகோவிச்சிடம் 4-6, 1-6 என்ற நேர்செட்களில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். 

இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார் சுமித் நாகல். 22 வயதாகும் அர்ஜெண்டினாவின் பியோனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு பட்டத்தை வென்றதன்மூலம், 26 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 135வது இடத்தைப் பிடித்தார். இந்திலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் மேலும் 6 இடங்கள் முன்னேற்றம் கண்டு, 129 வது இடத்தைப் பிடித்துள்ளார். 

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுமித் நாகல், கடந்த ஆகஸ்ட் மாதம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதன்முறையாக பங்கேற்றக்கத் தொடங்கினார். அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் முன்னணி வீரரான ரோஜர் பெஃடரருக்கு எதிராக சிறப்பாக விளையாடி அனைவரின் கவனைத்தையும் கவர்ந்தார் சுமித் நாகல்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...