கோலியை பின்னுக்குத் தள்ளி டெஸ்ட் ரேங்கிங்கில் ஸ்மித் முதலிடம்!

விளையாட்டு
Updated Sep 03, 2019 | 18:20 IST | Times Now

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் ஒரு புள்ளியில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தை பிடித்தார்.

கோலியை பின்னுக்கு தள்ளி டெஸ்ட் ரேங்கிங்கில் ஸ்மித் முதலிடம், Smith pushes kohli to second spot to gain No1 rank in Test
கோலியை பின்னுக்கு தள்ளி டெஸ்ட் ரேங்கிங்கில் ஸ்மித் முதலிடம்!  |  Photo Credit: Twitter

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் ஒரு புள்ளியில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ஸ்டீவ் ஸ்மித் 904 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 2-வது இன்னிங்ஸில் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் 
ஸ்டீவ் ஸ்மித், ஒரு புள்ளியில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி 904 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தை பிடித்தார். 903 புள்ளிகளுடன் விராட் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார். 

 

 

டிசம்பர் 2015-ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் ரேங்கிங்கில் முதல் இடத்தில் இருந்த ஸ்மித்திற்கு  கடந்த ஆண்டு மார்ச் மாதம் பந்தை சேதப்படுத்தியதர்காக கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விராட் கோலி டெஸ்ட் ரிங்கிங்கில் முதல் இடத்தை பிடித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஸ்மித் விளையாட தொடங்கியுள்ள நிலையில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய அஜின்க்யா ரஹானே 7-வது இடத்திற்கும், ஹனுமா விஹாரி 30-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.    

 

பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 4 இடங்கள் முன்னேறி தற்போது ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளார். டாப்-10 ரேங்கில் அவரை தவிர வேறு எந்த இந்தியா பந்துவீச்சாளர்களும் இல்லை.    

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...