SRHvsKKR, IPL 2019: 161 ரன்களை எடுத்து கொல்கத்தாவை வீழ்த்தியது ஹைதராபாத்!

விளையாட்டு
Updated Apr 21, 2019 | 20:32 IST | Times Now

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

IPL 2019, ஐபிஎல் 2019
கொல்கத்தாவை வீழ்த்திய ஹைதராபாத்  |  Photo Credit: Twitter

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்ற 38வது போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது ஹைதராபாத் அணி. 

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்றது. இதனையடுத்து அந்த அணி முதலில் பெளலிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்களை எடுத்தது. இதனால் 160 ரன்கள் சன்ரைஸர்ஸுக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

கொல்கத்தா அணியில் கிறிஸ் லின் 51 ரன்களை எடுத்து அரை சதம் அடித்தார். சுனில் 25 ரன்கள் எடுத்திருந்தார். ரிங்கு சிங் 31 ரன்களைக் குவித்திருந்தார்.

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்ததாக பேட்டிங்கில் களமிறங்கிய சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் ஆடத்துவங்கியது. தொடக்க வீரரான வார்னர் 67 ரன்களைக் குவித்து அவுட் ஆனார். பேர்ஸ்டோவ் அதிரடியான ஆட்டத்தால் ரன்கள் குவிய ஆரம்பித்தது.

அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 80 ரன்களை குவித்தார்.  இதனையடுத்து ஹைதராபாத் அணி 15 ஓவர் முடிவில், 1 விக்கெட்டை இழந்து 9 விக்கெட்டுகள், 5 ஓவர்கள் என்கிற கணக்கில் 161 ரன்களை எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி அட்டகாசமாக வெற்றி பெற்றது.

NEXT STORY
SRHvsKKR, IPL 2019: 161 ரன்களை எடுத்து கொல்கத்தாவை வீழ்த்தியது ஹைதராபாத்! Description: சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
Loading...
Loading...
Loading...