வெ.இ தொடருக்கான இந்தியஅணி அறிவிப்பு! - பும்ரா, ஹர்திக்குக்கு ஓய்வு: தொடருக்கு பண்ட்தான் விக்கெட் கீப்பர்!

விளையாட்டு
Updated Jul 21, 2019 | 14:55 IST | Times Now

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் தினேஷ் கார்த்திக், பும்ரா, ஹர்திக் பாண்டியா பெயர் இடம்பெறவில்லை.

Indian Cricket Team
Indian Cricket Team  |  Photo Credit: AP

நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில் அடுத்தபடியாக ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. 3 டி-20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த தொடர் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 4-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இந்த தொடருக்கான அணியின் பட்டியலை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் பும்ராவுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

தோனியும் தாமாகவே தொடரில்  இருந்து வெளியேறிவிட்டதால் ரிஷப் பண்ட் மூன்று வகையான போட்டிகளுக்கும் விக்கெட் கீப்பராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியின் பட்டியல் இங்கே...

2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), அஜின்கியா ரஹானே (வி.சி), மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், சி புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷாப் பந்த் (டபிள்யூ.கே) விருத்திமான் சஹா (டபிள்யூ.கே), ஆர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் சாதவ் முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ்

3 ஒருநாள் போட்டிக்கான அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா (வி.சி), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (வார), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், கேதார் ஜாதவ், முகமது ஷம்மி , நவ்தீப் சைனி

3 டி20 போட்டிகளுக்கான அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (வி.சி), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (டபிள்யூ.கே), கிருனல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், தேல் , நவ்தீப் சைனி

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...