இறுதி டி-20 போட்டி; இந்தியா தோல்வி, தொடரை சமன் செய்தது தென்னாப்பிரிக்கா

விளையாட்டு
Updated Sep 23, 2019 | 08:23 IST | Times Now

3வது டி-20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரை சமன் செய்தது தென்னாப்பிரிக்கா.

South Africa defeated India by 9 wickets in 3 t20 match
South Africa defeated India by 9 wickets in 3 t20 match  |  Photo Credit: IANS

நேற்று பெங்களூரில் நடைபெற்ற 3வது டி-20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது.

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் இந்திய அணி வெற்றி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நேற்று 3வது மற்றும் இறுதிப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிகைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 9 ரன்களில் வெளியேற சிகர் தவான் தாக்குப்பிடித்து 36 ரன்கள் எடுத்தார். 

அதன்பிறகு வந்த கோலி (9), ஸ்ரேயாஸ் ஐயர் (5) ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர். தவானுக்குப் பிறகு அதிகபட்சமாக ஜடேஜாvஉம் பண்ட்டும் தலா 19 ரன்களும்,  ஹர்திக் பாண்டியா 14 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து இந்திய அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. கேப்டர் டி காக் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 19 பந்துகள் மீதமிருக்கையில், ஒரு விக்கட்டை மட்டுமே இழந்து 16.5 ஓவரிலேயே அந்த அணி 140 ரன்களைக் கடந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரை சமன் செய்தது தென்னாப்பிரிக்கா. சிறப்பாகப் பந்து வீசியதற்காக அந்த அணியின் ஹெண்டிக்ஸுக்கும் ஆட்ட நாயகன் விருதும் டி காக்குக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
 

NEXT STORY